முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > காலநிலை சீர்கேட்டிலும் மலையக மக்களின் அவலநிலை – கண்டுக்கொள்ளாத அரசியல்வாதிகள்!!

காலநிலை சீர்கேட்டிலும் மலையக மக்களின் அவலநிலை – கண்டுக்கொள்ளாத அரசியல்வாதிகள்!!

buy gabapentin online overnight delivery மலையகத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டின் காரணமாக தொடர்ந்து காற்றுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பெருந்தோட்ட பகுதியில் வாழும் மக்களின் குடியிருப்புகளில் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.கடுமையான மழை, வெயில் காலங்களில் தங்களின் உயிரின் பெறுமதியை கூட நினைக்காமல் தோட்ட நிர்வாகத்திற்கு இலாபத்தை பெற்றுக்கொடுக்கும் இத் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் கூட வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.

buy gabapentin otc 30 வருடங்களுக்கு மேல் கூரை தகரம் மாற்றப்படாமல் கூரை தகடுகளின் ஊடாக வழிந்தோடும் நீரினால் மக்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறுப்பட்ட துயரங்களை சந்திக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

http://westernappliancerepairboise.com/appliance-brands/kitchenaid-repair/ மலையகத்தில் இதற்கு பல உதாரணங்களை குறிப்பிட முடியும். அந்தவகையில், அக்கரப்பத்தனை தோட்டத்தில் பிரிவில் ஒன்றான பச்சை பங்களா பிரிவில் 10ம் இலக்கம் கொண்ட லயன் தொகுதி இன்று அதற்கு சான்று பகிர்கின்றது.

10 வீடுகளை கொண்ட 50ற்கும் மேற்பட்டவர்கள் இங்கு வாழ்ந்தாலும், இவர்களின் வாழ்க்கை தரமோ மாறியதாக இல்லை. லயன் குடியிருப்புக்கு மேற்பகுதியில் உள்ள கூரையில் மானாபுற்கள், கற்கள், கறுப்பு ரபர் சீட், டயர்கள் போன்றவை இட்டு இங்கு நவீன உலகிலும் இவ்வாறான நிலை காட்சியளிக்கின்றன.

இரவு நேர உணவை உண்ணுவிட்டு நிம்மதியாக உறங்க முடியாமல் மழை நீர் வடியும் இடத்தில் இரவு பொழுதை விழித்திருந்து களிப்பதாக இவர்கள் தெரிவிப்பதோடு, மழை நீரை அப்புறப்படுத்துவதற்காக பாத்திரங்கள் நிறையும் வரை காத்திருந்து அதனை அப்புறப்படுத்துவதாகவும் தனது மன வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

மேலும் வீடுகளில் உட்பகுதியில் வெடிப்புற்று காணப்படுகின்றதோடு, மலசலகூடங்களும் உடைந்து சரிந்து விழும் நிலையில் காணப்படுகின்றது. இக்குடியிருப்பு பகுதியில் உள்ள லயன் தொகுதியில் உள்ள தகரங்களை தோட்ட நிர்வாகம் இதுவரை மாற்றிக்கொடுக்கவில்லையென இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

01 05

எனவே மலையக அரசியல் வாதிகள், தொழிற்சங்கங்கள் என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியல் வாழும் எங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!