முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > நீண்டகால பிரச்சினையாக இருந்த; புரட்டொப்ட் பாதையை புனரமைக்க இ.தொ.கா நடவடிக்கை!

நீண்டகால பிரச்சினையாக இருந்த; புரட்டொப்ட் பாதையை புனரமைக்க இ.தொ.கா நடவடிக்கை!

புஸ்ஸல்லாவ நகரில் இருந்து புரட்டொப்ட் பகுதிக்கு செல்லும் பாதை குன்றும் குழியுமாக காணப்படும் நிலையில் கடந்த அரசாங்கத்தால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் கௌரவ ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பணிப்புரைக்கு அமைய பாதை புனரமைக்கப்பட்டாலும் ஆட்சி மாற்றத்தால் சுமார் மூன்று கி.மீ பாதை மாத்திரமே புனரமைக்கப்பட்டு கைவிடப்பட்டது.

இதை தொடர்ந்து புரட்டொப்ட் பகுதியின் பிரதேச சபை உறுப்பினர் கதிர்காமத்தம்பி ரஜீவ்காந்தி அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பணிப்புரையின் கீழ் மத்திய மாகாண தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புரட்டொப்ட் ரஸ்புரூக் பகுதியில் இருந்து பாதை செப்பனிடுவதற்கான ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

error: Content is protected !!