முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > வடக்கில் இராணுவ அதிகாரி ஏற்படுத்திய மாற்றம்- சர்வதேசத்தை ஈர்த்த சம்பவத்தை எடுத்துரைத்த இராதாகிருஸ்ணன்

வடக்கில் இராணுவ அதிகாரி ஏற்படுத்திய மாற்றம்- சர்வதேசத்தை ஈர்த்த சம்பவத்தை எடுத்துரைத்த இராதாகிருஸ்ணன்

Maxalt buy online in stock படைவீரர்களும் மனிதாபிமானம் உள்ளவர்களே இராணுவ அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம் செய்த காலம் மாறி அவர்கள் இடமாற்றம் பெற்று செல்லும் போது கண்ணீர் மல்க வழிஅனுப்பிய நிகழ்வு இன்று சர்வதேச ரீதியாக பேசப்படும் ஒரு பொருளாக மாறியிருக்கின்றது என கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின்யின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

can i buy Gabapentin over the counter in spain வவுனியா புதுக்குளம் கனிஷ்டவித்தியாளயத்தில் கல்வி அமைச்சினால் நிர்மாணிக்கபட்ட மண்டபம் நேற்று (12.06.2018)கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்ணன் தலைமையில் திறந்து வைக்கபட்டது இந் நிகழ்வில்

enter தொடர்ந்தும் அங்கு உறையாற்றிய கல்வி அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதிதலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதகிருஸ்னண்

கிளிநொச்சி விஸ்வமடு பகுதியில் கடமையாற்றிய கேனல் ரத்ணப்பிரியபந்து இடமாற்றம் பெற்று அம்பேபுஸ்ஸ பகுதிக்கு செல்லும் அந்த நிகழ்வு இன்று ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது. ஆனாஇராஜாங்க ல் இது ஒரு சாதாரண நடைமுறை பல படை அதிகாரிகள் இடமாற்றம் பெற்று செல்லும் போது அது ஒரு சாதாரண நிகழ்வாகவே இருந்துள்ளது. ஆனால் கேணல் ரத்ணப்பிரியபந்து இடமாற்றம் பெற்று செல்கின்ற பொழுது அது பலரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.இதற்கு காரணம் வடபகுதி மக்கள் மத்தியில் அவர் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார் அதற்கு காரணம் என்ன?

கடந்த 30வருடகால யுத்தத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் தன்னாலான பல சேவைகளை செய்துள்ளார். குறிப்பாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக வேலை வாய்ப்புகள் பெற்று கொடுத்துள்ளமை மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தியமை மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுத்தமை காணிகள் விடுவிப்பு என பலதரபட்ட சேவைகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே படைஅதிகாரிகள் என்பவர்கள் வெறுமனே யுத்தம் செய்வது என்று இல்லாமல் இதற்கு அப்பாற் சென்று மனிதாபிமான ரீதியாக மக்களுக்கு என்ன செய்யமுடியும் என்பதை இவர் தனது செயலின் மூலம் செய்து காட்டியிருக்கின்றார். இதனை அனைவரும் பின்பற்ற முடியுமாக இருந்தால் யுத்தத்தால் பாதிக்கபட்ட மக்களின் வாழ்க்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

இவருடைய செயற்பாட்டின் மூலமாக நல்லதொரு முன்னுதாரணம் காட்டபட்டுள்ளது இவருடைய இந்த சேவை நல்லாட்சிக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே நான் கருதுகிறேன் இன்று பல அரச அதிகாரிகள் சுற்றுநிருபத்திற்கு வெளியில் சென்று வேலை செய்ய விருப்புவதில்லை. ஆனால் மக்களின் நன்மைக்காக எந்த ஒரு சுற்றுநிருபத்தையும் உடைத்துக் கொண்டு வெளியில் வந்து வேலை செய்யமுடியும் என்பதை கேனல் ரத்ணப்பிரியபந்து உணர்த்தியிருக்கின்றார்.

இன்று ஜனாதிபதியும் பிரதமரும் கல்வி அபிவிருத்திக்காக பலகோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளனர் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கல்விக்கான சேவைகள் தற்பொழுது படிப்படியாக மாணவர்களிடம் கையளிக்கபட்டு வருகின்றது. இது போன்று இன்னும்பல வேலைதிட்டங்களின் பிரதிபலன்களை மாணவர்களும் ஆசிரியர்களும் அதிபர்களும் கல்வி அதிகாரிகளும் மிக விரைவில் பெற்றுக் கொள்வார்கள்.

இன்று சர்வதேசத்தில் பல நாடுகள் பேச்சிவார்த்தையின் மூலம் பலவிடயங்களுக்கு தீர்வு காணப்படுகின்றது. அதேபோல எங்களுடைய நாட்டில் சம்பந்தபட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் எங்களுடைய நாட்டின் பிரச்சினைக்கும் மிக இலகுவாக தீர்வுகாணமுடியும்.

அரசாங்கத்தின் ஊடாக அபிவிருத்தி என்று வருகின்றபோது அதனை செயற்படுத்துவதற்கு அந்தந்த பகுதிகளில் இருக்கும் மக்களால் தெரிவுசெய்யபட்ட பிரதிநிதிகள் தங்களுடைய பங்களிப்பையும் முழுமையாக பெற்றுக் கொடுக்கவேண்டும் அதனை விடுத்து குறைகூறி கொண்டு இருப்பதன் மூலம் நாம் எதனையும் சாதிக்கமுடியாது அபிவிருத்தி என்பது இன்றைய காலகட்டத்தில் அதுவும் விசேடமாக வடபகுதி மக்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!