முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தொழில் பயிற்சிக்கு வழிகாட்டும் மேலும் மூன்று வழிகாட்டல் பயிற்சிகளை நடத்த பிரிடோ நிறுவனம் ஏற்பாடு

தொழில் பயிற்சிக்கு வழிகாட்டும் மேலும் மூன்று வழிகாட்டல் பயிற்சிகளை நடத்த பிரிடோ நிறுவனம் ஏற்பாடு

தொழில் பயிற்சி பெறுவதற்கு வசதிகள் இருந்தும் இது வரை காலமும் மலையக இளைஞர் யுவதிகள் பல்வேறு காரணங்களால் இந்த வசதிகளை பயன்படுத்தவில்லை.
இதன் காரணமாக உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ அவா்கள் வேலைவாய்ப்பு பெறும் போது பயிற்சியற்றவா்களாக குறைந்த ஊதியத்தை பெறுபவா்களாகவும்  அதிலே திருப்தியடைந்தவா்களாகவும் இருந்திருக்கின்றனா்.

இந்த பின்னனியில் இளைஞா்களை தொழில் பயிற்சி பெறுவதற்கு ஊக்குவிக்கும் முகமாக பிரிடோ நிறுவனம் வழிகாட்டல் பயிற்சியை ஆரம்பித்தது.  ஏற்கனவே நடத்தப்பட்ட பயிற்சிகளில் அதிகமான இளைஞரும் யுவதிகளும் கலந்து கொண்டனா்.

இதன் போது அவா்களில் பெரும்பான்மையானோர் தொழில் பயிற்சி பெறுவதனால் ஏற்படும் நீண்ட கால நன்மைகள் குறித்தோ அல்லது தொழில் பயிற்சிகளை பெறும் வாய்ப்பு எங்கெல்லாம் உள்ளது என்பது பற்றியோ அறியாதவா்களாக இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

இந்த பயிற்சிகளின் பின்னா் இளைஞா்கள் தமது எதிர்காலம் குறித்து தௌிவான முடிவுகளை எடுத்ததையும் தொழில்பயிற்சி பெறுவதன் முக்கியத்துவதை அறிந்து உடனடியாக அவ்வாறான தொழில் பயிற்சி நிறுவனங்களில் இணைந்து பயிற்சி பெறவும் ஆர்வமும் அக்கறையூம் காட்டியுள்ளனர்.

இந்த முயற்சியை மற்றைய பகுதிகளில் உள்ள இளைஞருக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் இம்மாதம் 7ம் திகதி அன்று சனிக்கிழமை காலை 9மணிக்கு பூண்டுலோயா விவேகானந்தா வித்தியாலயத்திலும் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மஸ்கெலியா நல்லதண்ணி தமிழ் வித்தியாலயத்தில் காலை 09 மணிக்கும் அதே தினத்தில் பிப. 2.00 மணிக்கு அப்கொட் கௌரவில கோயில் மண்டபத்திலும் தொழில் பயிற்சி வழிகாட்டல் கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளது.

இது தொடா்பான மேலதிக விபரம் அவசியமானவா்கள் 0 772277425 மற்றும் 0772277441 இலக்கங்களோடு தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

ஆக்கரப்பத்தனை நிருபர்

Leave a Reply

error: Content is protected !!