விஜயகலா மகேஸ்வரஸ்வரனுக்கு ஆதரவாக களமிறங்கிய கணபதி கனகராஜ்!!

0
98

காலம் கடத்தாமல் தமிழா்களுக்கு நியாயமான உரிமை வழங்கப்பட்டிருந்தால் புலிகளின் தேவை குறித்து பிரதி அமைச்சா் விஜயகலா மகேஸ்வரஸ்வரன் பேசியிருக்க மாட்டார். என மத்திய மாகாண உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு இந் நல்லாட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற அரசாங்கத்திற்கு தமிழர்கள் பெருவாரியாக வாக்களித்தார்கள். இது வெறுமனே ஆட்சி மாற்றம் ஒன்றுக்காக வழங்கப்பட்ட வாக்குகள் அல்ல. இந்நாட்டின் மிக நீண்டகால இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை இவர்கள் பெற்றுத்தருவார்கள் என்ற அதீத எதிர்ப்பார்ப்புடன் தமிழர்கள் வாக்களித்தார்கள். ஆனால் கடந்த மூன்றறை ஆண்டுகளாக இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் வெறும் வாய் பேச்சாக பேசப்பட்டு காலம் மட்டுமே கடத்தப்படுகிறது.

இந்த நிலையில் வடக்கு கிழக்கு மலையக பகுதிகள் இந்த அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையின்மை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வைத்து பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் கூற்று சிறுபான்மை சமூகத்தின் உள்ளக்குமுறலை வெளிக்காட்டுகிறதே தவிர அவர் ஒரு தீவிரவாதத்தை கொண்டு வரவேண்டுமென்ற நோக்கில் பேசியதாக தெரியவில்லை. மக்கள் கடந்த காலத்துடன் தற்போதைய நிலைமையை ஒப்பிட்டு பாh;க்க தொடங்கிவிட்டாh;கள். அரசாங்கம் சா;வதேச நிh;பங்களை சமாளிப்பதற்காக சிறுபாண்மை மக்களின் நலன்களில் அக்கரை காட்டுவதைபோல நடிக்கிறது. தமிழா;கள் மிதவாதிகளாகஇ தீவிரவாதிகளாகஇ பேச்சுவாh;தைகளின் மூலம் பிரச்சினைக்கு தீh;வூகாண்பவா;களாகஇ அரசாங்கத்திற்கு அனுசரணையாக இருந்து உhpமைகளை வென்றெடுக்க முனைபவா;களாகஇ பல பாத்திரங்களை எடுத்தும் பெரும்பாண்மை சமூகம் சிறுபாண்மை மக்களை ஏரெடுத்தும் பார்க்கவில்லை என்றால் பிரதியமைச்சா; விஜயகலா மகேஸ்வரன் போன்றவா;கள் உணாச்சிவசப்படுவதில் என்ன தவறு இருக்கிறது?

அரசாங்கம் எஞ்சியிருக்கின்ற தனது பதவிக்காலத்தில் தமிழ்மக்களின் உணர்வூகளை புரிந்துக்கொண்டு அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வரவேண்டும். அதைவிடுத்து பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் கூற்றுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்ற இனவாத எத்தனிப்புகள் மேலும் இந்நாட்டை சீரழிக்கவே உதவும். சில இனவாதக்குழுக்கள் எதிர்வரும் தேர்தலை மையப்படுத்தி இவ்வாறான அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்கின்றது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. இனவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் தண்டனை வழங்கவேண்டும் என்றால் அரசாங்கம் புதிய அரசியல் யாப்பினூடாக சிறுபாண்மை மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்கிவிட்டு அது பற்றி நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினா் கணபதி கனராஜ் தெரிவித்துள்ளார்.

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதிஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here