முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அட்டன் போடைஸ் பிரதான வீதியை அகலப்படுத்தும் பணி நோர்வூட் பிரதேச சபை முன்னெடுத்துள்ளது!!

அட்டன் போடைஸ் பிரதான வீதியை அகலப்படுத்தும் பணி நோர்வூட் பிரதேச சபை முன்னெடுத்துள்ளது!!

buy cipla finasteride அண்மையில் அட்டன் போடைஸ் பிரதான வீதியில்  ஏற்பட்ட மண்சரிவினால் இப்பகுதி மக்களின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டதுடன் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை டயகம பிரதேசத்தில் இருந்து அட்டன் செல்லும் பஸ் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் நிறுத்தப்படுகின்றன அட்டன் பகுதியிலிருந்து டயகம நோக்கி செல்லும் பஸ் அதே பகுதியில் நிறுத்தப்பட்டு பயணிகளை வெவ்வேறு பகுதிகளுக்கு பஸ்ஸில் ஏற்றிச்செல்கின்றனர்.

see url இப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு நோர்வூட் பிரதேச சபை மற்றும் அக்கரபத்தனை பிரதேச சபையும் இணைந்து,  மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி.சத்திவேல் கணபதி கனகராஜ் அவர்களின் கவனதிற்கு கொண்டுவந்ததையடுத்து 12 .07.2018 அன்று பாதை அகலப்படுத்தும் பணி இடம்பெற்றது இதற்கான நடவடிக்கையை நோர்வூட் பிரதேச சபை உப தலைவர்.எஸ் கிசோ . அக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினர் இராமன் கோபால் ஆகியோர் முன்னெடுத்தனர்.

follow FB_IMG_1531385026090 FB_IMG_1531385047937
அக்கரப்பத்தனை நிருபர், எஸ். சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!