அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நகரில் 713 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் 13.07.2018 அன்று அதிகாலை அட்டன் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பரிசோதகர் மொஹமட் ஜெமில் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பிலிருந்து அட்டன் நோக்கி வந்து கொண்டிருந்த பஸ் ஒன்றில் வந்த நபர் ஒருவரை சோதனை செய்த போது குறித்த நபரிடமிருந்து ஆறு சிறிய பக்கட் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மிகவும் சூட்சபமான முறையில் உடம்பில் மறைத்து வைத்து கொண்டு வந்த போது அட்டன் மல்லியப்பு சந்தியில் மேற்படி பஸ்ஸினை சோதனையிட்டபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஹெரோயின் பக்கட்டுக்கள் கொட்டகலை பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பத்தனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் ஹெரோயின் பக்கட்கள் 13.07.2018 அன்று அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)