நோர்வூட் பிரதேசசபைக்கு 87மில்லியன் நிதி ஒதுக்கீடு – நோர்வூட்பிரதேசசபையின தவிசாளர் கணபதி ரவிகுழந்தைவேல் சபையில் அறிவிப்பு.

0
108

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேசசபைகள் அதிகரிக்கபட்டதில் நோர்வூட் பிரதேசசபைக்கு மாத்திரம் 87மில்லியன் ரூபா நிதி ஒதுக்கபட்டுள்ளதாக நகரசபைகள் மற்றும் உள்ளூராட்ச்சி சபைகள் அமைச்சர் பைதர் முஸ்தப்பாவினால் வழங்கபட்டுள்ளதாக 13.07.2018.வெள்ளிகிழமை இடம் பெற்ற அமர்வின் போது நோர்வூட் பிரதேசசபையின தவிசாளர் இதனை தெரிவித்தார் .

இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தலைமையில் அண்மையில் இடம் பெற்ற பேச்சிவார்த்தையின் போதே இந்த நிதி ஒதுக்கபட்டதாக நோர்வூட் பிரதேசசபையின் அமர்வின் போது தெரிவித்தார்.

இதன் போது தவிசாளர் உட்பட நோர்வூட் பிரதேசசபையின் உதவி தவிசாளர் தட்சனா மூர்த்தி கிஷோகுமார் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன் சபை அமர்வின் போது மேலும் கருத்து வெளியிட்ட நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் கணபதி ரவி குழந்தைவேல் 87மில்லியன் ரூபாவில் பிரதேசசபையின் வாகனங்களுக்கு 47மில்லியன் ரூபாவும் பிரதேசசபைக்கான புதிய கட்டிடம் அமைத்தல் மற்றும் நோர்வூட் பிரதேசசபைக்குட்டபட்ட புனரமைக்கபட்டாத வீதிகளை புனரமைக்கவும் நோர்வூட் பிரதேசசபையின் கீழ் ஆயர்வேத வைத்தியசாலை ஒன்றை அமைக்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேலை நோர்வூட்பிரதேசசபையை ஒரு சிறந்த சபையாக முன்னெடுத்து காட்ட பிரதேசசபையில் அங்கம் வைக்கின்ற உறுப்பினர்களும் கட்சி பேதங்கள் பாராது ஒத்துழைப்பை நல்கவேண்டுமெனவும் அவர் கேட்டுகொண்டார். நாம் அனைவரும் மக்களுக்காக சேவை செய்யவே இங்கு வந்துள்ளோம் நாம் அனைவரையும் மக்கள் வாக்களித்து தெரிவு செய்திருக்கிறார்கள் அவர்களுக்கான சேவையினை மேற்கொள்ளவே வந்தள்ளோம். ஆகையால் தனி மரம் தோப்பாகாது என்ற பழமொழிக்கு அமைய நாம் அனைவரும் ஒன்றினைந்து நோர்வூட் பிரதேசசபையின் ஊடாக மக்களுக்கு சேவையினை மேற்கொண்டு நோர்வூட் பிரதேசபையை ஒரு சிறந்த பிரதேசசபையாக உறுவாக்க வேண்டும் என்பதே எதிர்கால நோக்கம்மெனவும் குறிப்பிட்டார்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here