முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ள புகையிரத ஊழியர்கள்

இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ள புகையிரத ஊழியர்கள்

புகையிரத ஓட்டுனர்கள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் புகையிரத அதிபர்கள் இணைந்து இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் ஒன்றில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பள முரண்பாடுகளை திருத்தம் செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த வேலைநிறுத்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக புகையிரத இயந்திர ஓட்டுனர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ள எந்தவொரு அதிகாரியும் இதுவரையில் முன்வரவில்லை எனவும், இதனால் நிச்சயமாக இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

error: Content is protected !!