முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > புரட்டொப்ட் பகுதி மாணவர்களுக்கான கருத்தரங்கு இ.தொ.கா தலைமையில் நடைபெற்றது!!

புரட்டொப்ட் பகுதி மாணவர்களுக்கான கருத்தரங்கு இ.தொ.கா தலைமையில் நடைபெற்றது!!

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைக்கான முன்னோடி கருத்தரங்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்கலாள ரஜீவ்காந்தி மற்றும் செல்வமதன் தலைமையில் ஹல்பொட வடக்கு தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.இக்கருத்தரங்கில் ஹல்பொட நோத்,மேமொழி,பூச்சிகொடை,ரஸ்புரூக் தமிழ் வித்தியாலயங்களில் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் தோற்றும் அனைத்து மாணவர்களும் கலந்துகொண்டதுடன்.புரட்டொப்ட் பகுதியின் பேருந்து சங்கத்தினர் தனது முழுமையான ஆதரவை வளங்கியமை குறிப்பிடத்தக்கது.ஆரம்ப நிகழ்வில் இ.தொ.கா உபத்தலைவர் எம்.எஸ்.எஸ் செல்லமுத்து மற்றும் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்களான ரஜீவ்காந்தி ,செல்வமதன், கொத்மலை பிரதேச அரசியல் அமைப்பாளர் புன்னியமூர்த்தி மற்றும் கொத்மலை வளைய கல்விப்பணிப்பாளர் நடராஜ் , புரட்டொப்ட் பேருந்து சங்க தலைவர் நீலமேகம் உபத்தலைவர் பிரபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

error: Content is protected !!