முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > மாகாண அமைச்சரின் இரங்கல் செய்தி

மாகாண அமைச்சரின் இரங்கல் செய்தி

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவு தமிழகத்திற்கு மட்டுமின்றி உலக வாழ் தமிழ் மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மறைவை முன்னிட்டு அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

உடல்நல குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதி
7.8.2018 செவ்வாய்கிழமை மாலை உயிரிழந்துள்ளார். இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி மறைந்த செய்தி மிகவும் சோகத்தை அளித்துள்ளது. அவரின் மறைவு தமிழகத்திற்கு மட்டும் இல்லாமல் உலக வாழ் தமிழ் மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இந்திய அரசியலில் முதுபெரும் அறிஞரும் தமிழகத்தை தனது உழைப்பால் முன்
மாதிரி மாநிலமாக முன்னெடுத்துச் சென்ற கலைஞர் அவர்கள் பெருவாழ்வு வாழ்ந்து இன்று எம்மை விட்டு மறைந்தாலும் அவர் தமிழுக்கு செய்த தொண்டுகள் இந்த வையகம் இருக்கும் வரை நிலைத்திருக்கும்.

உலக வாழ் தமிழருக்கெல்லாம் பிரச்சினை ஏற்படும்போது குரல் கொடுப்பவர் அவர். எந்தவொரு அரசியல் தலைவருக்கும் இல்லாத பெருமை 50 ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவராகவும் 60 ஆண்டுகள் தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் 5 முறை தமிழகத்தின் முதல்வராகவும் திகழ்ந்தவர். சமூக நீதிக்காக பாடுபட்டவர் கலைத்துறையின் ஒரு சகாப்பதம் மிக தைரியமானர் மிக எளிமையானவர் பண்முகத்தன்மை கொண்ட தலைவர் திரைத்துறையிலும் அரசியலிலும் எதையும் விட்டு வைக்காதவர்.

தமிழுக்காக மிகவும் பாடுப்பட்ட பெருந்தலைவர் கலைஞர் மறைந்தாலும் அவர் விட்டு சென்ற பணிகள் தொடரும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயத்தில் என்றும் வாழ்வார்.அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி
மலையக மக்கள் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்து கொள்கின்றேன் என்றார்.

 

 

தலவாக்கலை பி.கேதீஸ்

Leave a Reply

error: Content is protected !!