முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அட்டன் கொழும்பு பிரதான வீதியின் ஸ்டதன் பகுதியில் மண்சரிவு!!

அட்டன் கொழும்பு பிரதான வீதியின் ஸ்டதன் பகுதியில் மண்சரிவு!!

மலையகத்தில் தொடரும் மழையின் காரணமாக அட்டன் கொழும்பு பிரதான வீதியின் ஸ்டதன் பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்இந்த அனர்த்தம் 10.08.2018. வெள்ளிக்கிழமை 12.30 மணிஅளவில் இடம் பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அட்டன் கொழும்பு பிரதான வீதியின் ஸ்டதன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் வாகன சாரதிகள் ஒரு வழி போக்குவரத்தினை மேற்காள்ளுமாறும் அட்டன் பொலிஸார் கோரியுள்ளனர்.

இதேவேலை அட்டன் கொழும்பு பிரதான வீதியின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் சாரதிகள் மிக அவதானமாக வாகனத்தை செலுத்துமாறு கோரபட்டுள்ளது.

இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள மண் மேட்டினை அகற்றுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு அறிவிக்கபட்டுள்ளதாகவும் குறித்த மண் மேட்டினை அகற்றுவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!