முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > இந்திய அரசாங்கம் பாரிய நிதியை கல்வி அபிவிருத்திக்காக வழங்கி வருகின்றமை பெரும் பாராட்டிற்குறிய செயற்பாடாகும் – வே.இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!!

இந்திய அரசாங்கம் பாரிய நிதியை கல்வி அபிவிருத்திக்காக வழங்கி வருகின்றமை பெரும் பாராட்டிற்குறிய செயற்பாடாகும் – வே.இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!!

http://azteenmagazine.com/beauty.php?article=259 இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய 95 மில்லியன் ரூபாவை கல்வி இராஜாங்க அமைச்சின் ஒத்துழைப்பு காரணமாகவே இன்று அது சாத்தியமாகியுள்ளது. அதற்கு காரணம் எங்களுடைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் எங்களுடைய அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி ஏனெனில் இதற்கான வட் வரியை செலுத்த முன்வந்தது கல்வி அமைச்சு என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.மத்திய மாகாண கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் அபிவிருத்திக்கான திட்டங்களுக்கான அடிக்கல் (10.08.2018) அன்று நாட்டிவைக்கப்பட்டது.

http://stampinkpaper.com/2017/10/sip-challenge-120-colors/ இந்திய அரசாங்கத்தின் 95 மில்லியன் ரூபா நன்கொடையின் மூலம் இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, கண்டி இந்திய உதவித்தூதுவர் திரேந்திர சிங், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மத்திய மாகாண கல்வி அமைச்சர் ரமேஸ்வரன், மத்திய மாகாண சபைத்தலைவர் மதியுகராஜா, வலய கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் உட்பட மாணவர்களும் கலந்து கொண்டனர்.

http://1payroll.com/services/human-resources/background-checks/ தொடர்ந்து அங்கு உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர்,

இந்திய அரசாங்கம் புஸ்ஸல்லாவ சரஸ்வதி பாடசாலைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த 95 மில்லியன் ரூபா நிதியை வழங்க முன்வந்தது. அந்த நிதிக்கு வட் வரி கட்ட வேண்டியநிலை ஏற்பட்டது. அதன்பொழுது நான் மத்திய மாகாண முதலமைச்சருடனும் மத்திய மாகாண கல்வி அமைச்சருடனும் இது தொடர்பாக பேசிய பொழுது அவர்கள் மத்திய மாகாண நிதி நிலைமை காரணமாக அதனை செலுத்த முடியாத ஒரு நிலை இருப்பதாக கூறினார்கள்.

எனவே இந்த நிதியை எப்படியாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் நான் எங்களுடைய கல்வி அமைச்சில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி ஆகியோரிடம் கலந்துரையாடி அந்த வட் வரியை எங்களுடைய அமைச்சின் மூலமாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்பே இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. இந்திய அரசாங்கம் இலங்கையின் கல்வி அபிவிருத்திக்கு பாரிய நிதி உதவிகளை செய்து வருகின்றது.

மிக விரைவில் 300 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் மத்திய மாகாணத்தில் ஆறு (6) பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் இரண்டு (2) பாடசாலைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் ஒரு(1)பாடசாலையையும் அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

அதே போல வடகிழக்கு மாவட்டங்களிலும் பாடசாலைகள் அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது. எனவே இந்திய அரசாங்கம் பாரிய நிதியை கல்வி அபிவிருத்திக்காக வழங்கி வருகின்றமை பெரும் பாராட்டிற்குறிய செயற்பாடாகும் .இதனை எதிர்கட்சிகளும் அரசாங்கத்தையும் இந்தியாவையும் விமர்சிப்பவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!