முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > கலைஞரின் மறைவுக்கு தொழிற்சங்கவாதி சிங்.பொன்னையா இரங்கல்!!

கலைஞரின் மறைவுக்கு தொழிற்சங்கவாதி சிங்.பொன்னையா இரங்கல்!!

go here இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும் தமிர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவருமான தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மறைவு உலகத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும் என சிரேஸ்ட தொழிற்ச்சங்கவாதியும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சிங்.பொன்னையா
தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மறைவை முன்னிட்டு அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

watch சமூக நீதிக் காவலராய்ரூபவ் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட தலித் மற்றும் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் கேடயமாய் திகழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி. பெண்களுக்கு சம உரிமை நல்கி சொத்தில் சம பங்கு தந்தவர் கருணாநிதி. விவசாயிகளுக்கு வாழ்வு தந்தவர். தமிழ்நாடும் தமிழினமும் தமிழ் மொழியும் உள்ளவரை அவரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். கருணாநிதி என்ற தலைவன் மறைந்தார் என்ற செய்தி மன தளவில் ஏற்றுக் கொள்ள முடியாத துயரச் செய்தியாகும்.

source link தனது வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும் நெருக்கடிகளையும் எதிர் கொண்டு வெற்றி கண்ட அவர்ரூபவ் தனது உடல் நலப் பாதிப்பில் இருந்தும் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு நாம் இருந்தோம். நமது நம்பிக்கை பொய்யாகி விட்டபோதிலும் தமிழக மக்களின் நெஞ்சங்களிலும் உலக வாழ் தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் என்றென்றும் அவர் நீங்காமல் நிலைத்து நிற்பார்.

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அங்கம் அவர். மாநிலங்களுக்கு பல உரிமைகளை பெற்றுக் கொடுத்தவர்ரூபவ்
மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தவர் என அவரின் அரசியல் சாகசங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவருடைய வாழ்க்கை பாதை அரசியல் பாதை அனைவருக்கும் மிகப்பெரிய பாடமாக அமையும். அவரின் மறைவு உலக வாழ் தமிழ் மக்களுக்கு ரூடவ்டு செய்ய முடியாத இழப்பு ஆகும் என்றார்.

 

தலவாக்கலை பி.கேதீஸ்

Leave a Reply

error: Content is protected !!