தெரசா மே பிரிட்டன் பிரதமர் தேர்வில் முன்னணி!

0
125

இலண்டன் – பதவி விலகிச் செல்லும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுக்குப் பதிலாக கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்புகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஆகக் கடைசியான தகவல்களின்படி, தெரசா மே முன்னணி வகிக்கின்றார். இவர் பிரிட்டனின் நடப்பு உள்துறை அமைச்சராவார்.

முதலில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்த தெரசா மே, தற்போது மக்கள் தீர்ப்பின்படி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனை பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் என அறிவித்துள்ளார்.

கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 165 வாக்குகளை இதுவரை தெரசா மே பெற்றிருக்கின்றார்.

இதற்கிடையில் பிரிட்டிஷ் பவுண்ட் நாணயத்தின் மதிப்பு வெகுவாகச் சரிந்துள்ளதோடு, பிரிட்டனில் உள்ள நிலம் வீடுகள் போன்ற சொத்துக்களின் மதிப்பும் வெகுவாக சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here