தோட்டத் தொழிலாளா்களின் சம்பள உயா்வு கோரிக்கை ஒரு சமூகத்தின் பொருளாதார பிரச்சினையாகும் சகலரும் ஒருமித்த கருத்துடன் ஒன்றினைய வேண்டும்- கணபதி கனகராஜ் தெரிவிப்பு

0
71

 

தோட்டத் தொழிலாளா்களின் சம்பள உயா்விற்கான கூட்டு ஒப்பந்தமும் மற்றும் தோட்டத் தொழிலாளா்களின் நலன்புரி விடயங்களுக்கான கூட்டு ஒப்பந்தமும் மீண்டும் புதிப்பிக்கவிருக்கின்ற இக்காலப்பகுதியில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சகல தரப்பினரும் ஒருமித்த கருத்துடன் செயற்பட வேண்டும். என மத்திய மாகாணசபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளா் காங்கிரசின் உப தலைவருமான கணபதி கனகராஜ் தொிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளா் காங்கிரசின் தலைவா் ஆறுமுகன் தொண்டமான் இந்த விடயத்தில் திறந்த மனதுடன் சகலரையும் இணைத்துக்கொண்டு அணுகும் நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார் மலையக சமூகத்தின் முற்று முழுதான ஆதரவுடன் தோட்டத் தொழிலாளா்களின் சம்பள விடயத்தை இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் கையாளவிருக்கிறது.

தோட்டத் தொழிலாளா்களின் சம்பள அதிகாிப்புக்கான கூட்டு ஒப்பந்தம் குறித்து சம்பந்தப்பட்ட சமூகத்தை சோ்ந்த அனைவரும் பேசுவது ஆரோக்கியமான விடயமாகும். ஆனால் ஆக்கபூவமான கருத்துக்களுக்கு பதிலாக மக்களை குழப்பி அரசியல் தொழிற்சங்க ஆதாயம் தேட முற்பட்ட கருத்துக்கள் வெளிவந்ததே அதிகம் இதனால் மேலும் சமூகத்தில் பிளவுகள் ஏற்பட்டதே தவிர அவை தோட்டத் தொழிலாளா்களின் நியாயமான கோரிக்கையை வழுப்படுத்த பயன்படவில்லை. இது தோட்டத் தொழிலாளருக்கு சம்பளத்தை வழங்க வேண்டிய பெருந்தோட்ட கமபனிகளுக்கு பேச்சுவார்த்தையில் சாதகமான நிலையையே ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த காலங்களில் முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களில் சில பின்னடைவுகளுக்கு சில தொழிற்சங்கங்கள் இந்த விடயத்தை அரசியல் தொழிற்சங்க இலாபத்தை இலக்காக கொண்டு செயற்பட்டதே காரணமாகும்.

அரசாங்கத்திற்கு அதிகளவிலான அண்ணிய செலாவணியை பெற்றுத்தரும் தொழில்துறையாக பெருந்தோட்ட தொழில்துறை இருந்துவருவதால் ஏற்றுமதி வருமானத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அந்த வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் தமிழ் தொழிலாளா்களுக்கு வழங்குவதில்லை. ஏற்றுமதி வருமானத்திற்காக பெருந்தோட்ட கம்பனிகளுடன் சமரசத்தை செய்துகொண்டு தொழிலாளா்கள் ஓரங்கட்டப்படுகின்றனா். பெருந்தோட்ட கம்பனிகளை பொருத்தவரையில் தமது இலாப நோக்கத்திற்காக உற்பத்தி அடிப்படையிலான சம்பளம் என்ற புதிய முறையை புகுத்தி தோட்டத் தொழிலாளா்களை மொத்தமாக சுரண்டி பிழைக்கும் தந்திரத்தை கையாளுகின்றன. ஆனால் இந்த பெருந்தோட்ட துறையை நம்பி இலட்சக்கணக்கான மனித ஜுவன்கள் வாழ்ந்துவருகின்றனா். என்பதை அரசாங்கமும் பெருந்தோட்ட கம்பனிகளும் மறந்து செயற்பட்டுவருகின்றனா். இந்த யதார்த்த நிலையை சாியாக புரிந்து கொண்டு எதிர்காலத்தில் திட்டமிட்டு சம்பள அதிகாிப்பு விடயத்தில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

கடந்த காலங்களில் பெருந்தோட்ட துறையை விட்டு தொழிலாளா்கள் பெருமளவில் வெளியேறியுள்ளனா் இதற்கு பெருந்தோட்ட கம்பனிகளிள் தொழிலாளா்களை கையாளும் முறையின் விளைவே ஆகும். தோட்டத் தொழிலாளா்கள் தமது வாழ்வாதாரத்திற்கு பொருத்தமான சம்பள அதிகாிப்பை வழங்கி தொழில் பாதுகாப்பு தொழில் கௌரவம் என்பவற்றை மேம்படுத்த வேண்டும். தோட்டங்களில் தொழிலாளா் எண்ணிக்கை எதிர“காலத்தில் குறைவடைந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் பெருந்தோட்ட கம்பனிகளே பொறுப்பாகும். தோட்டத் தொழிலாளா்களை சமயாசமய தொழிலாளா்களாகவும் ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளா்களாகவும் மாற்றி குறைந்த கூலியை கொடுத்து தமது இலாபத்தை அதிகரித்துக் கொள்ளும் திட்டத்திற்கு எதிர்காலத்தில் இடந்தரமுடியாது.

தோட்டத் தொழிலாளா்களின் குறிப்பாக மலையக மக்களின் வாழ்கைத்தரமும் பெருந்தோட்ட துறை வருமானத்தை சார்ந்திருப்பதால் இந்த விடயம் ஒரு சமூகத்தின் பிரச்சினையாகும். இவ்விடயத்தில் கடந்த காலத்தில் அரசாங்கம் கம்பனிகளுக்கு சார்பாக செயற்பட்டது போலல்லாமல் தோட்ட தொழிலாளா்கள் சார்பாகவே செயற்பட வேண்டும். அத்துடன் டொலரின் விலை அதிகாிப்பின் மூலம் பெருமளவிலான வருமானத்தை தோட்டக் கம்பனிகள் ஈட்டிவருகின்றன.

இதன் அனுகூலங்கள் தோட்டத்தொழிலாளா்களுக்கு வழங்கப்படுவதில்லை. எதிர்காலத்தில் இவ்விடயம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினா் கணபதி கனகராஜ் தொிவித்துள்ளார்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here