முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > திம்புள்ளயில் மண்சரிவு காரணமாக வீடுகள் சேதம்…

திம்புள்ளயில் மண்சரிவு காரணமாக வீடுகள் சேதம்…

திம்புள்ள பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் மண்சரிவு காரணமாக 5 வீடுகளின் சமயலறைகள் பாதிக்கப்பட்டுள்ளது.கிறேக்கிலி தோட்ட முதலாம் இலக்க லயன் குடியிருப்பின் பின்புறத்தில் சமயலறைப்பகுதியில் 15.08.2018 அன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்சரிவினால் ஐந்து வீடுகளின் சமயலறைப்பகுதிகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. எனினும் உயிராபத்துகள் எதுவும் இல்லையென பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

DSC05319

குறித்த இடத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட திம்புள்ள பத்தனை கிராம சேவகர் சம்பவத்தை நேரில் பார்வையிட்டதோடு, அவர்களுக்கான நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தோட்ட நிர்வாகம் மற்றும் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் ஜெயகாந்த் ஆகியோர் மக்களை சந்தித்து நிலைமையை விசாரித்ததோடு, நிவாரண உதவிகளையும் மாற்று நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

தொடரும் மழை காரணமாக இப்பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சத்துடன் மக்கள் இருக்கின்றனர்.

 

க.கிஷாந்தன்

Leave a Reply

error: Content is protected !!