மலையகத்தில் கடும் மழை- நீர்தேக்கத்தின் வாண்கதவுகள் திறப்பு!!

0
103

மலையகத்தில் தொடரும் மழை கால நிலையினால் மண்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் நீர்தேக்கங்களில் வாண் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதுதொடர்ந்து மழை பெய்து வருகின்ற நிலையில் 15.08.2018 காலை முதல் மஸ்கெலிய மவுசாகலை நீர்தேக்கத்தின் வாண் கதவுகள் மூன்று திறந்து விடப்பட்டுள்ளதுடன் மேல்கொத்தமலை நீர்தேக்கத்தின் வாண்கதவுகள் மூன்றும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர் நிரம்பி வழிகின்றது. மவுசாகலை நீர்தேக்கத்தின் வாண் கதவு திறக்கப்பட்டுள்ளமையினால் லக்ஷபான கெனியன் நீர்தேக்கத்தின் நீர்மட்டமும் வெகுவாக உயர்வடைந்துள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர் .

அத்தோடு  காசல்ரி நீர்தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

மேலும் தொடர் மழையினால் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அட்டன் தலவாக்கலை பிரதான பாதையின் குடாகம பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகல் ஒருவழிபோக்குவரத்து இடம்பெறுவதாக அட்டன் பொலிஸார் தெரிவித்ததுடன் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் தெரிவித்தனர்.

DSC05305 IMG-20180814-WA0008

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here