முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > குடா மஸ்கெலியா பகுதியில் மண்சரிவு – ஒரு வீடு சேதம் – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

குடா மஸ்கெலியா பகுதியில் மண்சரிவு – ஒரு வீடு சேதம் – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடா மஸ்கெலியா பகுதியில் 320 பிரவுன்லோ கிராம சேவகர் பிரிவில் 15.0-8.2018 அன்று காலை 7.30 ஏற்பட்ட மண்சரிவினால் ஒரு வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது. அந்த வீட்டில் வாழ்ந்து வந்த நான்கு பிள்ளைகளின் தந்தை கடும் காயங்களுக்கு உள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்து கடும் மழை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது

மண்சரிவு ஏற்படும் போது குறித்து வீட்டில் மூன்று பேர் இருந்துள்ளதாகவும் இவர்கள் வேலை நிமித்தம் வெளியேறியதால் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக அம்பகமுவ பிரதேச செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய 05 வீடுகளைச் சேர்ந்த 23 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைப்பதற்காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிராம சேவகர் சிவலிங்கம் பூவேந்தன் தெரிவித்தார்.

Photo (2) Photo (3)

பாதிக்கப்பட்டவர்ர்களுக்கு தேவையான சமைத்த உணவு மற்றும் அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க தேவையான அறிவுறுத்தல்களையும் பிரதேச செயலாளர் தனக்கு வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!