முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்தில் மண்சரிவு- பயணிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!!

ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்தில் மண்சரிவு- பயணிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!!

அட்டன் தனியார் நிலைய வளாகத்தில் மண்சரிவுகள் எற்பட்டுள்ளமையினால் பயணிகள் அச்சம் கொண்டுள்ளனர்.பெய்து வரும் கடும் மழை வானிலை காரணமாக அட்டன் கொழும்பு வீதியின் செனன் பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதுடன் அட்டன் தனியார் பஸ் தரிப்பிடத்திலும் இரு வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

பஸ் தரிப்பு நிலையத்திலுள்ள பொது மலசல கூடத்திலும் பஸ்தரிப்பு வளாகத்திலுமே 15.08.2018 மதியம் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது

அட்டன் காமினிபுர பகுதியில் வழிந்தோடும் நீர் பஸ்தரிப்பு நிலைய பகுதியில் பாய்வதாலே மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கப்படுவதுடன் பஸ் வண்டி ஓட்டுனர்களும் பயணிகளும் அவதானத்துடன் இருக்குமாறு அட்டன் பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

received_864338400425418

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Leave a Reply

error: Content is protected !!