முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தாயை கல்லால் தாக்கிய 11வயது மகனுக்கு பொலிஸாரால் பிணை

தாயை கல்லால் தாக்கிய 11வயது மகனுக்கு பொலிஸாரால் பிணை

பொகவந்தலாவ செல்வகந்த தோட்டபகுதியில் தனது தாயை கல்லால் தாக்கிய 11வயது சிறுவனுக்கு பொகவந்தலாவ பொலிஸாரால் பிணைவழங்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்இந்த சம்பவம் 24.08.2018.வெள்ளிகிழமை மாலை வேலையில் பிணை வழங்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும்தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த 11வயது சிறுவனுக்கு அவருடைய தாய் மிளகாய் தூள்எறிந்தமையின் காரணமாக மகன் ஆத்திரமடைந்து தனது தாயை கல்லால் தாக்கியதாக பொலிஸாருக்க வழங்கபட்ட வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது

இதேவேலை தாக்குதலுக்கு உள்ளான சிறுவனின் தாய் பொகவந்தலாவ வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் அயல் வீடுகளில் வேலை செய்து தனது தாய்க்கும் தங்கைகும் உணவு தேடி கொண்டு வந்து கொடுப்பதாகவும் தனது தாயின் வலது கையில் நரம்பு முறிவூஏற்பட்டுள்ளமையால் தொழில் புரிய முடியாது எனவும் தெரிவிக்கபடுகிறது.
DSC04016

குறித்த சிறுவன் பாடசாலைக்கு செல்வதில்லை தான் பாடசாலை செல்ல ஆசையாக இருந்தாலும் எனக்கு கற்றல் உபகரணங்களை பெற்றுதர எவரும்இல்லையென தெரிவித்தார். சிறுவனின் தந்தை கொழும்பு பகுதியில் பணிபுரிந்து வருவதாகவும் இரண்டு அல்லது ஒருவருடங்களுக்கு ஒரு முறை வந்து தனது பிள்ளைகளை பார்த்துவிட்டு செல்வதாகவும் தெரிவிக்கபடுகிறது

இதேவேலை குறித்த சிறுவனின் வீட்டில் சமைத்து உண்பதற்கான வசதிகள் கூட இல்லையென பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமைகுறிப்பிடதக்கது

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!