முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றும் நாளையும் நடைபெறும்

அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றும் நாளையும் நடைபெறும்

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் 13 தோட்டங்களில் 235 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று 25ம் மற்றும் நாளை 26ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.இன்று மற்றும் நாளைய தினங்களில் இடம்பெறவுள்ள இவ்அடிக்கல்நாட்டும் வைபவங்களானது கிரேக்லி தோட்டத்தில் 30 வீடுகள், டெலிக்கியர் சென். அண்ட்ரூஸ் பிரிவில் 20 வீடுகள், தலவாக்கலை பெரிய கட்டுக்கலை தோட்டத்தில் 20 வீடுகள், உடரதல்ல தோட்டத்தில் 30 வீடுகள், நுவரெலியா மேல் பிரிவில் 15 வீடுகள், மாக்கஸ் தோட்டம் கீழ் பிரிவில் 15 வீடுகள், மஸ்கெலியா கிலன்டில் தோட்டத்தில் 20 வீடுகள், கிலனோஜி டீ சைட் பிரிவில் 15 வீடுகள், பெயர்லோன் பாகனி பிரிவில் 15 வீடுகள், பெயர்லோன் பிளேயரோன் பிரிவில் 15 வீடுகள், கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் 25 வீடுகள் மற்றும் லோகி சென் கூம்ஸ் பிரிவில் 15 வீடுகள் நி;ர்மாணிப்பதற்காக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய முன்னனியின் தலைவருமாகிய பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையி;ல் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

தலவாக்கலை பி.கேதீஸ்

Leave a Reply

error: Content is protected !!