மஸ்கெலியா கவரவில அம்மன் ஆலயத்தில் கொள்ளை….

0
125

மஸ்கெலியா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சாமிமலை கவரவில அம்மன் ஆலயத்தில்இருந்த ஒரு தொகைதங்க ஆபரணங்கள் மற்றும்ஆலயத்தில் வைக்கபட்டிருந்தஉண்டியல் என்பன உடைக்கபட்டு இனந்தெரியாதவர்களால் களவாடபட்டுள்ளதாக மஸ்கெலியாபொலிஸார் தெரிவித்தனர்.

இந்ததிருட்டு சம்பவம் 07.09.2018.வெள்ளிகிழமைவிடியற்காலை இடம் பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார்தெரிவித்தனர்.

குறித்த கவரவில தோட்ட ஆலயத்திற்கு பொறுப்பான பூசாரி இன்று விடியற்காலை ஆலயத்திற்குசென்ற பொழுதே ஆலயத்தின் கதவு உடைக்கபட்டு காணபட்டதை இனங்கண்டு  ஆலயத்தின் பூசாரி உடனடியாக ஆலய நிர்வாகத்திற்கு அறிவித்தபிறகு ஆலயத்தின்நிர்வாகம் இந்த கொள்ளை சம்பவம்தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ்நிலையத்தில் முறைபாடு செய்யபட்டுள்ளதாக பொலிஸார்மேலும் தெரிவித்தனர்.

முறைபாட்டினை பதிவு செய்த மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துவிசாரனைளை ஆரம்பித்துள்ளதோடு சம்பவ இடத்திற்கு கைரேகை பொலிஸாரும்வரவழைக்கபட்டு தற்பொழுது விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த கொள்ளை  சம்பவம்தொடர்பில் இதவரையிலும் எவரும்கைது செய்யபடவில்லையென மஸ்கெலியா பொலிஸார்தெரிவித்தனர்.

இதேவேலை மஸ்கெலியா கவரவிலஅம்மன் ஆலயத்தில் 12பவுன் தங்கநகைளும் ஆலயத்தின் உண்டியலில் 50ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் இருந்ததாக பொலிஸாரின்ஆரம்பகட்ட  விசாரனைகளில்இருந்து தெரியவந்துள்ளது.

இடம் பெற்ற  இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸ்மோப்பநாய் வரவழைக்கபட்டு தேடுதல் நடவடிக்கையினை மேற்கொள்ள இருப்பதாக மஸ்கெலியா பொலிஸார் மேலும்தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில்சந்தேக நபர்களை கைது செய்யும்  நடடிக்கையினை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுவருவதோடு சம்பவம் தொடர்பில்மேலதிக விசாரனைகளை மஸ்கெலியா பொலிஸார்மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

எஸ். சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here