முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > வட்டவளை தனியார் தோட்ட உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை கட்டிவைத்துவிட்டு கொள்ளையர் கைவரிசை!

வட்டவளை தனியார் தோட்ட உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை கட்டிவைத்துவிட்டு கொள்ளையர் கைவரிசை!

வட்டவளை மாணிக்கவத்த எனும் தனியார் தோட்டத்தின் உரிமையாளர் மற்றும் அவரின் மனுவை ஆகியோரின் கை கால் கட்டபட்டநிலையில் இனந்தெரியாத குழுவினர் ஒன்று குறித்த உரிமையாளரின் விடுதிக்குள் புகுந்து விடுதியில் இருந்த தங்கஆபரனங்கள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 13.09.2018.வியாழகிழமை விடியற்காலை 01மணியில் இருந்து 2மணிக்குள் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக வட்டவலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த மாணிக்கவத்த எனும் தனியார் தோட்டத்தின் உரிமையாளரும் அவரின் மணைவியூம் நித்திரையில் இருந்த சமயம் இனந் தெரியாத கொள்ளை குழுவினர்கள் தமது முகங்களை மூடியவாறு உள் நுழைந்து இருவரின் கை மற்றும் கால்கலை கட்டி போட்டு விட்டே குறித்த தங்க ஆபரனங்களையூம் பணத்தையூம் கொள்ளையடித்து தப்பித்து சென்றுள்ளதாக வட்டவளை பொலிஸ்நிலையத்தில் பதிவு செய்யபட்டுள்ள முறைபாட்டில் இருந்து தெரியவந்துள்ளது.

இதுவரையிலும் கொள்ளையடிக்கபட்ட தங்க ஆபரனங்கள் மற்றும் பணம் தொடர்பான பெருமதி தொடர்பில் பொலிஸார் அறிவிக்கவில்லை. இதேவேலை சம்பவ இடத்திற்கு சென்ற வட்டவளை பொலிஸார்விசாரனைகளை ஆரம்பித்துள்ளதோடு தடயவியல் பொலிஸார் ஆகியோரை அழைத்து விசாரனைகலை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் எவரும் கைது செய்யபடவில்லையென தெரிவித்த வட்டவலை பொலிஸார் மேலதிக விசாரனைகலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!