மாணவர்களுக்கிடையிலான மோதலில் காயமடைந்தோர் தொகை 30 ஆக அதிகரிப்பு!

0
103

பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 30 மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன் 4 பேர் பேராதனை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட நாட்களாக பகிடிவதைக்கு சார்பான மாணவர்களுக்கும், பகிடிவதைக்கு எதிரான மாணவர்களுக்குமிடையில் முறுகல் நிலைக் காணப்பட்டு வந்துள்ளது.

நேற்று விஞ்ஞான பீட ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து பீடாதிபதியின் தலைமையில் டெங்கு ஒழிப்புக்காக சிரமதான பணியிலீடுபட்டனர்.

இதன் போது பீடாதிபதியுடனும், விரிவுரையாளர்களிடத்தும் ஏற்பட்டிருந்த விரிசல் காரணமாக பகிடிவதைக்கு ஆதரவான மாணவர்கள் இந்த சிரமதான பணியில் பங்குபற்றவில்லை.

இச் சிரமதானத்தின் போது பகிடிவதைக்கு எதிரான மாணவன் ஒருவன் கட்டைகாற்சட்டையுடன் சிரமதான பணியில் ஈடுபட்டுள்ளார். பல்கலைக்கழக சம்பிரதாயத்திற்கு அமைய ஆண்கள் விடுதிகளிலும், விளையாட்டு மைதானத்திலுமே அரைக் காற்சட்டை அணிய முடியும். எனவே பகிடிவதையில்லாமையே இதற்கு காரணம் எனக் கூறி அந்த மாணவனை தாக்கியுள்ளனர்.

இதன் போது பகிடிவதைக்கு சார்பான கோஷ்டிக்கும் பகிடிவதைக்கு எதிரான கோஷ்டிக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 30 மாணவர்கள் காயமடைந்து 4 பேர் ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் விரிவுரையாளர் கலாநிதி சுதர்மா யடிகம்மன தலையில் காயத்துடனும் தற்காலிக விரிவுரையாளர்கள் இருவர் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு ஊழியர்கள், மாணவர் ஒழுக்காற்று குழுவினர், விரிவுரையாளர்கள் தலையிட்டு மோதலைத் தடுத்துள்ளனர். விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here