பன்றிக்கு விரித்த வலையில் சிக்கிய ஏழு அடி நீளமான சிறுத்தை!

0
96

பட்டிபொல காவல்துறைக்குட்பட்ட போகோம்பர பகுதியில் வலையில் சிக்குண்டு ஏழு அடி நீளம் கொண்ட சிறுத்தை புலியின் உடலம் ஒன்று 18.09.2018.காலை 09மணி அளவில் மீட்கபட்டுள்ளதாக பட்டிபொல காவல்துறையினர் தெரிவித்தனர் குறித்த சிறுத்தை புலியின் உடலத்தை இன்று காலை தொழிலுக்கு சென்ற பொதுமக்களால் இனங்கண்டதை அடுத்து பட்டிபொல காவல்துறையினருக்கு தகவல் வழங்கபட்டமை தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த சிறுத்தை புலியின் உடலத்தை பட்டிபொல் காவல்துறையினர் மீட்டதாக மேலும் தெரிவித்தனர்.

போகம்பர பகுதியில் அதிகமானோர் மரக்கறி விவசாயத்தினை மேற்கொண்டு வருகினற்மையால்; குறித்த விவசாயதோட்டபகுதிகளுக்கு அதிகமான பன்றிகளின் நடமாற்றம் காணப்படுவதால் பன்றிக்கு விரிக்கபட்டவைலயிலே இந்த சிறுத்தை புலி சிக்குண்டு உயிர் இழந்துள்ளதாக பட்டிபொலகாவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா வனவிலங்கு அதிhரிகளுக்கு அறிவிக்கபட்டுள்ளதோடு சிறுத்தை புலியின் உடலம் மீட்கபட்ட இடத்திற்கு வனவிலங்கு அதிகாரிகள் சென்று விசாரனைகலை ஆரம்பித்துள்ளதோடு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவானின் அனுமதியோடு பேராதெனிய பல்கலைகழகத்திற்கு பிரேத பரீசோதனைக்காக சிறுத்தை புலியின் உடலம் கொண்டு செல்லவிருப்பதாக நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர்.

இதேவேலை குறித்த சிறுத்தை புலி கழுத்து பகுதி இருக்கியா காரனத்தினாலே இறந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் சம்பவம் தொடர்பில் இதவரையிலும் சந்தேக நபர் எவரும் கைது செய்யபட வில்லையெனவூம் வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்னர் .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகலை நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(டி.சந்ரு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here