கொட்டகலையில் மாணவர்களுக்கு மத்தியில் தகாத வார்த்தை பிரயோகத்துடன் சண்டையிட்ட; ஆசிரியைகளை இடமாற்ற கோரி மகஜர்!

0
152

மாணவர்கள் மத்தியில் மோதலில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தை பிரயோகம் செய்த ஆசிரியைகளை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் நுவரெலியா வலயக கல்வி பணிமனையில் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளளதாக பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எஸ் கிருஷ்னராஜா தெரிவித்தார்

நுவரெலியா கல்வி வயத்திற்குட்பட்ட கொட்டகலை பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரு ஆசிரியைகள் மாணவர்கள் மத்தியில் தகாத வார்த்தை பிரயோகம் செய்து சண்டையிட்டமை தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் முறைபாடு செய்யப்படுள்ளது

இந் நிலையில் பாடசாலைக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் மாணவர்களுக்கு மத்தியில் அநாகரீகமாக நடந்துகொண்ட குறித்த ஆசிரியைகள் மீது நுவரெலியா வலயக்கல்வி பணிமனை நடவடிக்கை விசாரணை மேற்கொண்டு வருகிகின்ற நிலையிலே மேற்படி மகஜரை 28.08.2018 கையளிக்கப்பட்டுள்ளது

மாணவர்களுக்கு நல்வழிகட்டும் இடமாக. விளங்கும் பாடலையிலும்
பாடசாலையின் நாமத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் எந்த விடயங்களுக்கும் பழைய மாணவர் சங்கம் இடமளிக்காது என்பதுடன் மாணவர்கள் தவறான வழிகளுக்கு இட்டுச்செல்லும் வகையிலுள்ள மோதல் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி இடமாற்றம் செய்யயுமாறு பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் பி சிவலிங்கம் உட்பட முக்கியஸ்தர்களினால் மகஜர் கையளித்து கோரிக்கை விடுத்ததாகவும் கிருஷ்னராஜ் தெரிவித்தார் .

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here