முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > டெங்கு நோய் தொடர்பாக பொது மக்களை அறிவுறுத்தும் முகமாக அட்டனில் பேரணி….

டெங்கு நோய் தொடர்பாக பொது மக்களை அறிவுறுத்தும் முகமாக அட்டனில் பேரணி….

source url நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பினை தொடர்ந்து பொது மக்களை அறிவுறுத்தும் முகமாக அட்டனில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த திட்டம் 26.09.2018 அன்று அட்டன் ரிகோபோத் பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், டெங்கு பரவும் சூழலினை தடுக்கும் பேரணியூடான வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

http://markscherz.com/archives/tag/behaviour இந்த பேரணி அட்டன் கொமர்ஷல் வங்கிக்கு முன்னால் ஆரம்பமாகி அட்டன் மணிக்கூட்டு கோபுரம் வரை சென்றுள்ளனர்.

follow இதன் போது கழிவு பொருட்களை மீள் சுழற்சி செய்து எவ்வாறு சுற்றுப்புற சூழலை அழகுபடுத்தலாம் என்பது தொடர்பாக செயல்முறை செயற்பாடுகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களும், பெற்றோர்களும் வீதியின் இரு மருங்கிலும் காணப்படும் பொலித்தீன் மற்றும் ஏனைய கழிவு பொருட்களையும் அகற்றியுள்ளனர்.

அத்துடன்இ அட்டன் – டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் கே.பாலகிருஸ்ணன் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அட்டன் டிக்கோயா நகர சபை அதிகாரிகள் மற்றும் அம்பகமுவ பிரதேச சபை அதிகாரிகள், பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!