முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தலவாக்கலை -லிந்துல்ல நகரசபையில் கடமையாற்றிய ஊழியர்மீது அதன் உபதலைவர் பாரதிதாசன் தாக்குதல்? அசோகா சேபால முறைப்பாடு!

தலவாக்கலை -லிந்துல்ல நகரசபையில் கடமையாற்றிய ஊழியர்மீது அதன் உபதலைவர் பாரதிதாசன் தாக்குதல்? அசோகா சேபால முறைப்பாடு!

தனதுகாரியாலய அதிகாரியொருவரை தாக்கிய தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உப தலைவர் எல் பாரதிதாசனுக்கு எதிராக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடொன்று செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் அகோச சேபால தெரிவித்தார்

நகரசபை காரியாலயத்தில் கடமையாற்றும் லிந்துலை பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய எஸ்.லெட்சுமனன் என்பரே 25.09.2018 கடமை முடிந்து தனது வீட்டிற்கு சென்ற வேலையில் லிந்துலை நகரில் வைத்து தகாத வார்த்தை பிரயோகம் செய்து தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

தாக்குதலுக்கு இலக்காகிய குறித்தை நபர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த அசோக்க சேபால ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுடன் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க வெளிநாடு பயணமொன்றை கொண்டுள்ள நிலையில் மத்திய மாகாண விவசாய தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் பதில் முதலமைச்சராக ஐந்து நாட்களுக்கு மத்திய மாகாண ஆளுனர் பி பி தாசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதுடன் தலவாக்கலை நகரில் கடந்த 23 ம் திகதி இரவு வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது

இந் நிலையில் நகரசபையின் உப தலைவர் எல் பாரதிதாசன் தனது காரியாலய அதிகாரியை தாக்கியதுடன் தலவாக்கலை நகரசபையின் தலைவர் அசோக்க சேபாலவை பதில் முதலமைச்சர் ராமேஸ்வரனின் அதிகாரத்தை பயன்படுத்தி தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்ததாகவும் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தலவாக்கலை லிந்துலை நகரசபையை கைப்பற்ற பல தடவைகள் பல்வேறு சூழ்ச்சியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்வருவதாகவும் அசோக சேபால தெரிவித்தார்

சம்பவம் தொடர்பில் தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உபதலைவர் எல் பாரதிதாசனிடன் கேட்டபோது தான் யாரையும் தாக்கவில்லை என்றும் என்னை கைது செய்யும் நோக்கில் போலியான முறைபாட்டை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பொகவந்தலா நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!