முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பொகவந்தலாவ கெம்பியன் தோட்டப்பகுதியில் இரண்டு ஆலயங்களில் திருடர்கள் கைவரிசை!

பொகவந்தலாவ கெம்பியன் தோட்டப்பகுதியில் இரண்டு ஆலயங்களில் திருடர்கள் கைவரிசை!

பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவு தோட்டபகுதியில் இரண்டு ஆலயங்கள் இனந்தெரியதாவர்களால் உடைக்கபட்டு கொள்ளையிட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்த கொள்ளை சம்பவம் 27.09.2018.வெள்ளிகிழமை அதிகாலை இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது பொகந்தலாவ கெம்பியன் மேற்பிரிவூ தோட்டபகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றும் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் ஒன்றும் மொத்தம் இரண்டு ஆலயங்கள் உடைக்கபட்டுள்ளதாகவூம் முருகன் அலயத்தில் இருந்து தங்க நகைகள் மற்றும் உண்டியலில் வைக்கபட்டிருந்த பணம் என்பன கொள்ளையிட பட்டுள்ளதாகவூம் இதேவேலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் உள்ள தங்க நகைகள் மாத்திரம் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

இன்று அதிகாலை 06.30மணி அளவில் பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவூ தோட்டபகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குறித்த முருகன் ஆலயத்தின் ஊடாக சென்று கொண்டிருந்த பொது முருகன் ஆலயத்தின் கதவுகள் திறந்த நிலையில் இருந்ததாகவும் குறித்த நபர் ஆலயத்தின் கதவு இருப்பதை பார்த்து கோவில் பூசகருக்கு அறிவித்ததையடுத்து அங்கு திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் பொலிஸ்மோப்பநாய் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் வரவலைக்கபட்டு விசாரனைகள் ஆரம்பித்துள்ளதோடு இதுவரையிலும் சந்தேகநபர் எவரும் கைது செய்யபடவில்லையென பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

இதற்கு முன்னர் இந்த ஆலயத்தில் மூன்று முறை திருட்டு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

எனவே கொள்ளை சம்பவம் தொடர்பில் கொள்யையிடபட்ட பெறுமதி இதுவரையிலும் அறிவிக்கபடவில்லை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!