முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பெருந்தோட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்; மாகாணசபை உறுப்பினர் சரஸ்வதி வேண்டுகோள்!

பெருந்தோட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்; மாகாணசபை உறுப்பினர் சரஸ்வதி வேண்டுகோள்!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்த பேச்சுக்களில் பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தபட வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணியின் தலைவியும் மத்திய மாகாணசபை உறுப்பினருமாகிய சரஸ்வதிசிவகுரு தெரிவித்தார்

பெருந்தோட்;ட தொழிலாளர்களின் சம்பளஉயர்வு தொடர்பிலான கூட்டுஒப்பந்த கைச்சாத்து தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துளார்

பெருந்தோட்ட தொழில்துறை மட்டும் அல்லாது ஏனய தொழில்துறையிலும் பெண்களின் உழைப்பு அதிகளவில் கானப்படுகிறது இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் தேயிலை தொழில்துறையில் அதிகநேரம் வேலைசெய்பவர்கள் பெண்களே ஆவர் கடும் மழை, வெயில்,கடும் காற்று, அட்டைகடி, சிறுத்தை, குளவி தாக்குதலுக்கு மத்தியில் சவால்மிக்கதொரு நிலையில் தேயிலை கொழுந்தினை கொய்துவருகின்றனர்,

இவ்வாறு கடின உழைப்பாளிகளான பெண் தொழிலாளர்களுக்கு அதிகசலுகைகளும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகளவிலான அதிக ஊதியத்தை வழங்க தோட்ட கம்பணிகள் முன்வரவேண்டும் என்பதோடு முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டு ஒப்பந்த பேச்சிவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கங்களும் அதிகவனம் செலுத்த வேண்டுமென விடுத்துள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்,

மேலும் தேயிலை தொழிற்துறையை பொருத்தமட்டில் 50வீதம் மான பெண்கள் தொழில் புரிவதுடன் தொழிற்சங்கங்களுக்கு சந்தாபணமும் செலுத்திவருகின்றனர்,

ஆகவே பெண் தொழிலாளர்கள் தொடர்பில் மலையக தொழிற்சங்கங்கள் அதிக கவனம் செலுத்தவெண்டும் 1992ம் ஆ;ண்டு முதல் மேற்கொள்ளபட்ட கூட்டு ஒப்பந்த அடிப்படையில் 2016 ம் ஆண்டு வயிலான 25வருடத்தில் கூட்டு ஒப்பந்தத்தின் உடன்படிககையின் ஊடாக 500 ரூபாய் அடிப்படை சம்பளமான பெற்று கொடுக்கபட்டுள்ளது எனவே தற்போதய கால வாழ்க்கைசெலவிற்கேற்ப நாட்டின் எனய தொழில்துறையினருக்கு வழங்கும் சம்பள அடிப்படையூம் கருத்தில் கொண்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வினை வழங்க முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

(நோட்டன் பிரிஜ்நிருபர்)

Leave a Reply

error: Content is protected !!