பெருந்தோட்ட மலையக மக்களாகிய நாம் ஓரணியில் இணைவதனூடாகவே எமது உரிமைகளை வென்றடுக்க முடியும்- எம் உதயகுமார் தெரிவிப்பு

0
83

பெருந்தோட்ட மலையக மக்களாகிய நாம் ஓரணியில் இணைவதனூடாகவே எமது உரிமைகளை வென்றடுக்க முடியும் என தொழிலாளர் தேசியசங்கத்தின் பிரதி தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமாகிய எம் உதயகுமார் தெரிவித்தார்.

மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ்குமாரின் வேண்டுகோளுக்கிணங்க, தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து
மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட நலன் புரி விடயங்களுக்கு பயன்படுத்த கூடாரமும் நாட்காளிகளும் வழங்கி வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் சேவையை உணர்ந்து மலையக மக்கள் அனைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தோடு ஓரணி திரண்டு வருகின்றனர். அதேபோல கடந்த 23 ம் திகதி தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற சம்பளவுயர்வு வழங்க வேண்டும் என தலைவர் திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற கவனயிர்ப்பு போராட்டத்திற்கு தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் ஒன்று திரணடு போராட்டத்தத்திற்கு வலு சேர்த்தனர். தொழிலாளர் உரிமையை தொடர்ந்து பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தொழிலார்கள் ஒன்றுபட வேண்டும்.

மலையக மக்களின் உரிமை மற்றும் அவிருத்தியை நோக்காகக் கொண்டும் மலையக அரசியல் தலைவர்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியாக இணைந்து செயற்பட்டதன் பலனாகவே காணி உரிதியுடன் தனி வீட்டுத்திட்டம் உறுவாகி வருகின்றது. கல்வித்துறையிலே பாரிய வளர்ச்சி ஏற்ட்டுள்ளது. தொடர்ந்து தொழிலாளர்கள் அனைவரும் ஒற்றுமையோடு எம்மோடு பப்பனிப்பதனூடாக இன்றும் பல அபிவிருத்திகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம்.” என்று தெரிவித்தார்.

 

– நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here