முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பொகவந்தலாவையில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்து மூவர் கைது- மூவர் தப்பி ஓட்டம்

பொகவந்தலாவையில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்து மூவர் கைது- மூவர் தப்பி ஓட்டம்

http://evolveagency.com/wp-cron.php?doing_wp_cron=1527197968.3945159912109375000000 பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ இராணிகாடு மாவெளி வனபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகல்வில் ஈடுபட்டு வந்த ஆறுபேரில் மூன்று பேர் கைது செய்யபட்டுள்ளதாகவும் ஏனைய மூன்றுபேர் தப்பிஓடியூள்ளதாக
விஷேட அதிரடிபடையினர் தெரிவித்தனர்.

http://oceanadesigns.net/ இந்து கைது சம்பவம் 11.10.2018.வியாழகிழமை இரவு வேலையில் இடம் பெற்றதாக விஷேட அதிரடிபடையினர்
தெரிவித்தனர்.

buy Lyrica in mexico தலவாக்கலை விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொகவந்தலாவ இராணிகாடு மாவெளி வனபகுதியில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது இவர்கள் கைது செய்யபட்டதாகவும் இவர்கள் நீண்டகாலமாக குறித்த வனபகுதியில் இந்த சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் விஷேட அதிரடிபடையினர் கைபற்றியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யபட்டவர்களில் மூன்றுபேர் தப்பி சென்றுள்ளதோடு மேலும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்து பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் பொகவந்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் விஷேட அதிரடிபடையினர் மேலும் குறிப்பிட்டனர்

சந்தேக நபர்கள் மூன்று பேரும் 12.10.2018.வெள்ளிகிழமை அட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!