100 ரூபாதான் அதிகரிக்க முடியுமாம் இணக்கப்பாடின்றி முடிந்தது கூட்டு ஒப்பந்தப் பேச்சுக்கள்!

 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி நிறைவுக்கு வந்துள்ளது.

முதலாளிமார் சம்மேளனம் 100 ரூபாய் சம்பள அதிகரிப்பிற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.எனினும் அதற்கு தாம் இணங்கப் போவதில்லை என தொழிற்சங்க பிரதிநிதகள் தெரிவிக்கின்றனர்.

இன்று மாலை ராஜகிரியவில் இடம்பெற்ற முதலாளிமார் சம்மேளனத்துடனான கலந்துரயைாடலின் பின்னர் அதில் கலந்து கொண்ட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்து கொண்டனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் பிரதித் தலைவர் முத்துசிவலிங்கம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஆகிய
வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி நிறைவுக்கு வந்துள்ளது.

இன்றைய கூட்டமும் இணக்கப்பாடின்றி நிறைவுக்கு வந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகள் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

” அடிக்க அடிக்க அம்மியும் நகரும் ” என இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக மாற்றியே தீருவோம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். எவ்வாறாயினும் தீபாவளிக்கு முன் சம்பள அதிகரிப்பு எனும் தமது கனவு நனவாகவில்லை என்பது தொடர்பில் தாம் கவலை கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அழுத்தங்கள் ஊடாக சம்பள அதிகிரிப்பு என்பது சாத்தியமாகும் எனக் குறிப்பிட்ட அவர் ஆங்காங்கு இடம்பெறும் போராட்டங்கள் ஒரு இடத்திற்கு கொண்டு வரப்பட்டு வலுவாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் கொழுந்து பறிக்கும் அளவுக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் எனும் கோரிக்கையையும் தாம் நிராகரிப்பதாகவும் இதன்போது அரசியற் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

 

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

 177 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!