முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஆயிரத்தை வலியுறுத்தி அட்டன் சேனன் தோட்ட மக்கள் கவனயீர்ப்பு !

ஆயிரத்தை வலியுறுத்தி அட்டன் சேனன் தோட்ட மக்கள் கவனயீர்ப்பு !

தோட்ட தொழிலாளர்களின் மூன்றாவது பேச்சிவார்த்தை இனக்கபாடு இன்றி தோல்வியடைந்த நிலையில் 16.10.2018.செவ்வாய்கிழமை காலை 08மணியில் இருந்து 10மணிவரை செனன்தோட்ட மக்கள் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியை மறித்து செனன் பகுதியில் பாரிய ஆரபாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்

இந்த ஆர்பாட்டத்தின் போது கறுப்பு பட்டி அணிந்து இந்த ஆர்பாட்டத்தை முன்னெடுத்த போதிலும் தோட்ட தொழிலாளர்களாகிய எங்களுக்கு அடிப்படை சம்பளம் 1000ரூபா வேண்டும் என வழியுருத்தி முன்னெடுக்கபட்ட ஆர்பாட்டத்தின்
காரணமாக சுமார் இரண்டு மணித்தியாளம் அட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கபட்டது.

10 08

தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் மூன்றாம் கட்ட பேச்சிவார்த்தை இடம் பெற்றபோதும் இறுதியாக தோட்ட
தொழிலாளர்களாகிய எங்களுக்கு 600ரூபா அடிப்படை சம்பளம் தருவதாக கூறுகிறார்கள் தோட்ட தொழிலாளர்களாகிய நாங்கள் வெறுமனே கம்பனிகாரர்களிடம் 1000ரூபா கேட்கவில்லை எங்களின் உழைப்புக்கு ஏற்ற சம்பளத்தை தான் நாங்கள்
கேட்கிறோம் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்பாட்ட காரர்கள் தெரிவித்தனர்.

 

நாங்கள் எங்கள் இரத்தத்தை வியர்வையாக நிலத்தில் சிந்தி ஒரு நாளைக்கு 18கிலோ தேயிலை கொழுந்தை பறித்து வருகிறோம் அது எங்களிடம் வாக்கு கேட்கும் மலையக அரசியல்வாதிகள் எங்களின் சம்பளத்தை பெற்று கொடுங்கள் ஊடகங்களில்
மாத்திரம் அறிக்கை விடுகிறார்கள் நாட்டின் பிரதமருடனும் ஜனாதிபதியுடன் கதைத்ததாக கூறுகிறார்கள். ஆனால் இதுவரையிலும் எங்கள் 1000ரூபா அடிப்படை சம்பளத்திற்கு ஒரு தீர்க்கமான முடிவு எட்டபடவில்லை

இம் முறை தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 1000ரூபா மாத்திரம் பெற்று கொடுத்ததால் மாத்திரம் தான் எங்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியும் இல்லாவிட்டால் இம்முறை கறுப்பு தீபாவளியை கொண்டாட இருப்பதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமக்கள் குறிப்பிட்டனர்.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!