முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > டிக்கோயா தரவாளை மேற்பிரிவு தோட்ட பகுதயில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

டிக்கோயா தரவாளை மேற்பிரிவு தோட்ட பகுதயில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவாளை மேற்பிரிவு தோட்ட கொழுந்து மடுவத்தில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சடலம் 16.10.2018. செவ்வாய் கிழமை இரவு 10மணி அளவில் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

குறித்த தோட்ட பகுதியில் கொழுந்து மடுவத்தில் கிடந்த சடலம் தொடர்பில் பொதுமக்களால் வழங்கபட்ட தகவலுக்கு அமைய குறித்த சடலம் மீட்கபட்டுள்ளதாகவும் சலடமாக மீட்கபட்டவர் 45வயது மதிக்கதககவர் எனவும் இதுவரையிலும் சடலம் இனங்கானபடவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

IMG-20181017-WA0004 IMG-20181017-WA0001 IMG-20181017-WA0000

சம்பவம் தொடர்பில் மரணவிசாரனைகளுக்கு ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கபட்டு மரணவிசாரனைகளின் பின்னர் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லபடவிருப்பதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

 

Leave a Reply

error: Content is protected !!