கொழும்பு ஆர்பாட்டத்தில் மலையக இளைஞர்களை தாக்கியமைக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுப்பு

0
121

மலையக இளைஞர்களை கொழும்பு ஆர்பாட்டத்தில் வைத்து தாக்கிய பொலிஸாருக்கு எதிராக  நடவடிக்கை எடுக்கபட வேண்டும் தோட்ட தொழிலாளர்களின் ஆர்பாட்டத்தில்
தெரிவிப்பு

மலையக பெறுந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் ஆயிரம் ருபா வழங்கபட
வேண்டும் என கோரி பொகவந்தலாவ டின்சின் நகரபகதியில் ஹட்டன் பொகவந்தலாவ
பிரதான வீதியை மறித்து தோட்ட தொழிலாளர்கள் 25.10.2018 வியாழகிழமை நேற்று
ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்

இந்த ஆர்பாட்டத்தின் போது மலையக தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம்
ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கபட வெண்டும் என வழியுருத்தி மலையக இளைஞர்களால்
கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுக்கபட்ட ஆர்பாட்டத்தின் போது மலையக
இளைஞர்கள் தாக்கபட்டபட்டமையை எங்களால் ஏற்று கொள்ள முடியாது எங்களின்
வாக்குகளை பெற்று நல்லாட்சியை அமைத்து கொண்ட இந்த அரசாங்கம் எங்கள்
பிள்ளைகளை கடுமையாக தாக்கியிருக்கிறது இதற்கு மலையக அரசியல் வாதிகள்
தகுந்த பாடம் கற்பிக்கவேண்டம் எனவும் ஆர்பாட்ட காரர்கள் தெரிவித்தனர்

நாங்கள் இந்த நாட்டை பிரித்து கேட்கவில்லை எங்கள் இரத்தத்தை வியர்வையாக
நிலத்திலே சிந்தி கஸ்டபட்டுதான் எங்களின் உரிமையை நாங்கள் போராடி
கேட்கிறோம் ஆனால் இந்த அரசாங்கம் எங்களின் வாக்குகளை பெற்றுகொண்டு
பொலிஸாரை தூண்டிவிட்டு எங்களுக்கு நியாயமான சம்பளத்தை கேட்டு போராடிய
அப்பாவி இளைஞர்களை காட்டுமிராண்டி தனமாக தாக்கியிருக்கிறார்கள்.

IMG-20181025-WA0007 IMG-20181025-WA0005 IMG-20181025-WA0018 IMG-20181025-WA0010

தோட்ட தொழிலாளர்களாகிய எங்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவை இந்த
நல்லாட்சி அரசாங்கம் பெற்றுகொடுக்கவேண்டும் நாங்கள் மலையகத்தை பொறுத்தவரை
ஆறமுகன் தொண்டமான் மற்றும் அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோரை நம்பிதான்
வாக்களித்தோம் ஆனால் இன்று எங்களின் உரிமைகள் பறிக்கபட்டு எங்களின்
பிள்ளைகளை கொழும்பில் கடுமையாக தாக்கபட்டுள்ளனர். எனவே இதற்கு மலையக
அரசியல் வாதிகள் தகுந்த நடவடிக்கை பெற்று கொடுக்கபட வேண்டும் என
தெரிவித்தனர்

இந்த ஆர்பாட்டத்தின் போது பொகவந்தலாவ மோரா தெரேசியா போனோகோட் சிங்காரவத்த
ரொப்கில் ஆகிய தோட்டபகுதிகளை சேர்ந்த சுமார் 500கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here