முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அமைச்சி பதவிதருவதாக எனக்கு அழைப்பு விடுக்கிறார்கள்- கே.கே.பியதாச தெரிவிப்பு!!

அமைச்சி பதவிதருவதாக எனக்கு அழைப்பு விடுக்கிறார்கள்- கே.கே.பியதாச தெரிவிப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் காரணமாக புதிய பிரதமாராக மஹிந்தராஜபக்ஸ நியமிக்கட்டவுடன் புதிய அரசாங்கத்தோடு வந்து இணைந்து கொண்டால்அமைச்சி பதவி தருவதாக தமக்கு அழைப்பு விடுத்திருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே. கே.பியதாஸ தெரிவித்தார்.

04.11.2018.ஞாயிற்றுகிழமை ஹட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு முன்பாக இடம் பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே இதனை தெரிவிததார்

இந்த ஆர்பாட்டதில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பலர்
கலந்து கொண்டதோடு ஹட்டன் மணி கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் உள்ள
புத்தபகவானுக்கு விஷேட பூஜைகளிலும் கலந்து கொண்டதன் பின்னரே
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்.

நாட்டில் இன்று திடிர் என பிரதமரை மாற்றி புதிய பிரதமராக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களை இந்த நாட்டின் ஜனாதிபதி நியமித்துள்ளார் ஆனால் மஹிந்த அணியினர் பாராளுமன்றில் பெறும்பான்மையை நிறுபித்து காட்டுவதற்காக என்னையும் அழைத்து கூறினார்கள்.
உங்களுக்கு அமைச்சி பதவி தருகிறேன் பெறுந்தொகையான நிதி தருகின்றேன்
மஹிந்த ராஸபக்ஸ அவர்களுக்கு ஆதரவு வழங்குமாறு ஆனால் நான் ஒன்றை சொல்லி
கொள்ள விரும்புகிறேன் பாராளுமன்றத்திலே அனோகமான உறுப்பினர்கள் எங்களின்
பக்கமே இருக்கிறார். ஆகையால் பாராளுமன்றம் கூடிய பிறகு ஐக்கிய தேசிய
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் பெறும்பான்மையை காட்டுவார்
எனவும் தெரிவித்தார்.

ஆகவே நான் என்றுமே ஐக்கிய தேசிய கட்சியினை விட்டு கட்சி தாவல் பழக்கம் எனக்கு கிடையாது அதுமட்டும் அல்ல அமைச்சி பதவிக்கு ஆசைபட்டு என்றுமே மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆதரவு வழங்கபோவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!