முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தீபாவளி பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார்…

தீபாவளி பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார்…

தீபாவளி பண்டிகை நாளை (06.11.2018) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி திருநாளை வரவேற்க மலையக தோட்ட மக்கள் தற்போது ஆயத்தமாகி வருகின்றனர். தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தினால் தீபாவளி முற்பணம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப பொருட்கள், உடைகள் கொள்வனவு, வீட்டுக்கு வர்ணம் பூசுதல், வீட்டை துப்பரவு செய்தல், திண்பண்டங்கள் தயாரித்தல் போன்ற செயற்பாடுகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு 05.11.2018 அன்று அட்டனில் வர்த்தக நிலையங்களில் மக்கள் கூட்டம் சாதாரண அளவில் காணப்பட்டமையை காணக்கூடியதாக இருந்தது.

DSC01337 DSC01318 1 (1)

இதன்போது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெருந்தோட்ட பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் பொருளதார ரீதியாக பெருமளவு பாதிக்கப்பட்ட இந்நிலையில் தீபாவளி முற்பணமாக 10000 ரூபா வழங்கப்பட்ட போதிலும், இம்மக்கள் குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத அளவிலும் 05.11.2018 அன்று அட்டன் நகரில் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடதக்கது.

 

 

க.கிஷாந்தன்

Leave a Reply

error: Content is protected !!