முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தலவாக்கலையில் மோதல் – மூவர் அதிரடி கைது

தலவாக்கலையில் மோதல் – மூவர் அதிரடி கைது

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரில் நேற்றிரவு 8 மணியளவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மூவர் தலவாக்கலை பொலிஸாரால் இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில தினங்களாகவே குறித்த இரு குழுக்களுக்கும் பரஸ்பரம் கடுத்து முரண்பாடுகள் இருந்து வந்ததாகவும் அதன் விளைவாக இம் மோதல சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது.

இ.தொ.கா.மற்றும் இலங்கை ஐக்கிய மக்கள் சங்கம் ஆகிய தொழிற்சங்க ஆதரவாளர்களே குறித்த மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்றும் இலங்கை ஐக்கிய மக்கள் சங்க ஆதரவாளர்களே கைது செய்யப்பட்டு விசாரனைகளின் பின்னர் இன்று அதிகாலை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

ஒவ்வொரு வருடமும் தலவாக்கலையில் தீபாவளி வசந்த விழா ஒலிபரப்பினை இந்து இளைஞர் மன்றத்தின் அனுசரணையுனேயே இடம்பெற்று வந்துள்ளது . ஆனால் இம்முறை குறித்த ஒலிபரப்பு சேவையினை தலவாக்கலை – லிந்துலை நகரசபையுடன் விடியல் எனும் அமைப்பு இணைந்து முன்னெடுத்தது. இதன் காரணமாகவே அக் குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிய வருகிறது.  அண்மைக் காலமாக இவர்களுக்கி டையே அரசியல் ரீதியாகவும் முரண்பாடுகள் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

error: Content is protected !!