முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > 15ம் திகதிக்கு பிறகு மீண்டும் நான் அமைச்சராக வருவேன் – அட்டனில் திகாம்பரம் தெரிவிப்பு

15ம் திகதிக்கு பிறகு மீண்டும் நான் அமைச்சராக வருவேன் – அட்டனில் திகாம்பரம் தெரிவிப்பு

Tastylia (Tadalafil) 100% guarantee of pleasure மலையக மக்களுடைய வாக்குகளை பெற்று பராளுமன்றம் சென்று அமைச்சர் பதவியையும் பெற்று மக்களுக்காக சேவை செய்த நான் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் காரணமாக புதிய அமைச்சராக மாற்று கட்சியினை சார்ந்தவர்கள் பெற்றுள்ளார்கள். இருந்தாலும் மீண்டும் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சராக மீண்டும் நான் வருவேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதிதலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

buy brand name provigil online இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக மலையக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று 09.11.2018 அன்று அட்டன் டி.கே.ட.பிள்யு மண்டபத்தில் நடைபெற்றது.

go to link இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் யார் பிரதமராக வந்தாலும் சரி, ஜனாதிபதியாக வந்தாலும் சரி நாங்கள் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் திடிர் என நாட்டின் ஜனாதிபதி, புதிய பிரதமர் ஒருவரை நியமித்ததை எங்களால் ஏற்று கொள்ள முடியாதுள்ளது.

எங்களுக்கு கோடி கணக்கான அழைப்புகள் வந்தது. ஆனால் தமிழ் முற்போக்கு கூட்டணி நிதானமாக சிந்தித்து முடிவெடுத்துள்ளோம். நான் அமைச்சராக இருந்த காலபகுதியில் எவரும் செய்யாத வேலை திட்டங்களை நாங்கள் செய்து காட்டி இருக்கின்றோம்.

கடந்த மூன்று வருடங்களாக இல்லாத அமைச்சர் தீடிரென அமைச்சு பதவியை பெற்று கொண்டு பெயர்பலகைகளை மாற்றியுள்ளார். அவருக்கு பெயர் பலகைகளை மாத்திரம் மாற்ற முடியும். ஆனால் அவருக்கு வேறு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்தவர் ஒரு நாடகத்தை ஆடிவிட்டு எங்கள் எல்லோரையும் காட்டி கொடுத்து விட்டார். ஆனால் தமிழ் முற்போக்கு கூட்டனி என்றுமே யாரையும் காட்டி கொடுக்காது எனவும் தெரிவித்தார்

2015ம் ஆண்டுக்கு பிறகு நான் அமைச்சராக இருந்த காலபகுதியில் நான் வழங்கிய நியமனங்களை இரத்து செய்யுமாறு தற்போது உள்ள புதிய அமைச்சர் கூறுகிறார். ஆனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டிய தேவையில்லை. 15ம் திகதிக்கு பிறகு மீண்டும் நான் வருவேன். கடந்த 30ம் திகதி சௌமிமூர்த்தி தொண்டமானுடைய நினைவு தினத்தன்று பாராளுமன்ற பதவியில் இருந்து விலகபோவதாக கூறினார்கள். 30ம் திகதிக்கு முன்பு அமைச்சு பதவி பெற்று கொண்டு புதிய பிரதமர் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000ரூபா சம்பளம் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

எஸ் .சதீஸ் ,க.கிஷாந்தன்

Leave a Reply

error: Content is protected !!