நாடாளுமன்றில் இன்று நடந்தது என்ன?

0
96

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கூடுவதற்காக 1.25 மணிக்கு கோரம் மணி ஒலிக்கவிடப்பட்டது. எனினும், நண்பகல் 1 மணியளவிலேயே சபைக்குள் வந்துவிட்ட அரச தரப்பினர் சபாபீடத்தை கைப்பற்றிக்கொண்டதுடன், சபாநாயகர் ஆசனத்திலும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் உதவி செயலாளர் நாயகங்களின் ஆசனங்களிலும் அமர்ந்திருந்தனர்.பிற்பகல் 2.15 மணியளவில் கோரம் மணி ஒலிப்பது நிற்கவே எதிர்க்கட்சியின் உள்ளேவரும் கதவினூடாக சபாநாயகர் பலத்த மனிதச்சங்கிலி பொலிஸ் பாதுகாப்புடன் சபைக்குள் வந்து வேறு ஒரு ஆசனமிடப்பட்ட நிலையில் தமது செயற்பாட்டை ஆரம்பிதார்.

இதன்போது நிலையியல் கட்டளை தளர்ப்பு ஒத்திவைப்பு பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. சுதந்திரன் ( நிலையியல் கட்டளை 135 ) சமர்ப்பித்தார். அதனை ஜே.வி.பியின் எம்.பி. விஜித்த ஹேரத் வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சரைவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீண்டும் நேற்று ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க சபையில் சமர்ப்பித்தார்.

மின்னியல் மற்றும் பெயர் கூறும் அடிப்படை வக்கெடுப்பை நடத்த முடியாத நிலையில் நிலையியல் கட்டளைகள் 47 இன் பிரகாரம் குரல் பதிவு வாக்கு மூலம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சரைவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறியது.

இதற்கு மத்தியிலேயே இத்தனை களேபரங்கள்…………………

நன்றி – நிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here