முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி மலையகமெங்கும் மனித சங்கிலி போராட்டம்!!

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி மலையகமெங்கும் மனித சங்கிலி போராட்டம்!!

மலையகத்தில் பல பகுதிகளிலும் தோட்டத் தொழிலாளர்கள், ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து, மனித சங்கிலி போராட்டத்தில் 26.11.2018 அன்று ஈடுப்பட்டுள்ளனர்.நுவரெலியா, அட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, நோர்வூட், புஸ்ஸலாவ, டயகம, அக்கரப்பதனை, கொட்டகலை, தலவாக்கலை, வட்டவளை, கினிகத்தேனை, இராகலை, கந்தபளை, நானுஓயா, லிந்துலை, டிக்கோயா, புளியாவத்தை ஆகிய பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, தாம் தினமும் உழைக்கும் உழைப்புக்கு ஊதியமாக ஆயிரம் ரூபாயை வழங்கு என முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பதாதைகளையும், கறுப்பு கொடிகளையும் ஏந்திய வண்ணமும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து நகரங்களும் ஸ்தம்பிக்கப்பட்டு நகர வர்த்தகர்கள் தங்களது வியாபார நிலையங்களை மூடி ஆதரவு வழங்கியதோடு, வாகன சாரதிகள், நகர வர்த்தகர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதோடு, அவ்வப்பகுதிகளின் பிரதேச மற்றும் நகர சபைகளின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

 

க.கிஷாந்தன்

Leave a Reply

error: Content is protected !!