முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > சம்பள உயர்வு கோரி மலையக இந்து குருமார் ஒன்றியம் அட்டனில் பேரணி!!

சம்பள உயர்வு கோரி மலையக இந்து குருமார் ஒன்றியம் அட்டனில் பேரணி!!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி மலையக இந்து குருமார் ஒன்றியம் மற்றும் அகில இலங்கை இந்து மகா சபை ஊடாக அமைதியான பேரணி ஒன்று 26.11.2018 அன்று அட்டனில் இடம்பெற்றது.மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பேரணி அட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து அட்டன் நகர் வரை சென்றது.

இந்த பேரணியின் போது மலையகத்தில் பல பாகங்களிலும் இருந்து ஆலய குருக்கள் கலந்து கொண்டதோடு, மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் என பலரும் கலந்து கொண்டு தொழிலாளர்களின் சம்பள உயர்வை உடனடியாக கம்பனிகாரர்கள் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர்.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!