பாடசாலை விடுமுறைக்கு முன்னர் மாணவர்களுக்கான சீருடை அல்லது வவுச்சரை வழங்க வேண்டும் -CSTU!!

0
90

2018 வருடத்தின் பாடசாலை நடத்துதல் நவம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளதால் இது நாள்வரையில் பாடசாலை சீருடைகளோ அல்லது வவுச்சரையோ பெற்றுக் கொடுக்காததையிட்டு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது வண்மையான கண்டத்தை தெரிவித்துள்ளது.இதற்கு முனன்ர் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் விடுமுறைக்கு முன்னர் பாடசாலை சீருடை அல்லது வுவுச்சர் பெற்றுக்கொடுபப்தற்காக நடவடிக்கை எடுத்தமையானது அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் புதிய சீருடை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு முடியுமனான விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்ற அரசியலமைபுக்கு முரணான ஆட்சி மாற்றத்துடன் 2016ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த சீருடை வவுச்சருக்குப் பதிலாக துணி வழங்குவதாக அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதாக தெரிவிக்கும் அச்சங்கம் அகில விராஜ் காரியவசம் அமைச்சரால் சீருடைக்கான தரமான துணி வழங்குவதற்குப் பதிலாக ஆரம்பித்த வவுச்சர் பெற்றுக் கொடுக்கும் நடைமுறையை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள போவதில்லையென தெரிவிக்கிறது.

அதனால் நாற்பது இலட்சம் இந்நாட்டுப் பாடசாலை பிள்ளைகளை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்காது சீருடை அல்லது வவுச்சரை பாடசாலை விடுமுறைக்கு முன்னர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக எடுக்கும்படி இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்துகின்றார்.

 

தகவல்:நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here