இலங்கையில் எதிர்காலத்தில் இடம்பெறவிருந்த சதி முயற்சி முளையில் கிள்ளி எறியப்பட்டுள்ளது!

கடந்த ஒக்ரோபர் 26ந் திகதி இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இலங்கையின் அரசியல் நிலவரம் மீண்டும் ஒரு பேசுபொருளாகிவிட்டது. இதன் அர்த்தம் இலங்கை ஏதோ அமைதியான சுபீட்சம் நிறைந்த நாடாக இருந்தது. ஆனால் சடுதியாக நிகழ்ந்த அரசியல் சூறாவளியால் எல்லாம் தலைகீழாகி விட்டது என்றாகிவிடாது. இலங்கையைக் கொதிநிலையில் வைத்திருக்க வேண்டுமென்ற சூழ்ச்சித்திட்டங்கள் தொடர்ச்சியாக பேணப்பட்டு வருகின்றன என்பதையே இன்றைய நிலைமைகள் தெளிவாகக் காட்டுகின்றன.

ஏறத்தாள 30 ஆண்டுகாலம் உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்த காலத்தில் இலங்கையின்பால் இருந்த கவனம், 2009 ஆம் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியிருந்தது என்றே பலரும் எண்ணியிருந்தனர். ஆனால் உண்மை அப்படியானதல்ல. ஏனெனில் இலங்கையில் பயங்கரவாதத்தை விதைத்தவர்கள், பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் ஓய்ந்திருக்கமாட்டார்கள் என்பதையே இலங்கையில் தொடர்ச்சியாக நடந்தேறும் நிகழ்வுகள் காட்டி வந்துள்ளன, காட்டி வருகின்றன.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்த தலைமையிலான அரசு தோற்கடிக்கப்பட வேண்டுமென்று செய்யப்பட்ட பல்வேறு வகைப்பட்ட சக்திகளின் முனைப்புகளும், அத்தேர்தலில் மகிந்த தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் மீண்டும் ‘ஜனநாயகம்’ மலர்ந்து விட்டதாக சோடிக்கப்பட்டதும், இலங்கை மக்கள் தங்கள் அடிமைச்சங்கிலிகளை உடைக்க இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டும் என்பதையே தெளிவாகக் காட்டியிருந்தன. மகிந்த தலைமையிலான அரசினை அகற்ற அரும்பாடுபட்ட பல்வேறு வகைப்பட்ட சக்திகளே, இப்போதும் இலங்கையில் ஏதோ ‘ஜனநாயகம்’ செத்துவிட்டதாகப் பிதற்றித் திரிகின்றனர்.

இலங்கையில் எதிர்காலத்தில் இடம்பெறவிருந்த பெரியதொரு சதி முயற்சி முளையில் கிள்ளி எறியப்பட்டுள்ளது என்பதை உலக வரலாற்றினை நுண்ணியமாக ஆராய்பவர்களாலேயே பகுத்தறிய முடியும். சுருக்கமாகக் கூறுவதாயின், நவீன தாராளமயவாதத்தின் தென்னமெரிக்க பரிசோதனை என்றழைக்கப்படும், 1973 செப்டம்பர் மாதம் 11ந் திகதி சிலி நாட்டில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு மாதிரியான நிகழ்வு இலங்கையில் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதை உறுதியாகவே சொல்ல முடியும். ரஷ்சியப் புரட்சியின் நூற்றாண்டு நிiiவாக எழுதப்பட்ட, ‘புரட்சியும் எதிர்ப்புரட்சியும் 1917-2017’ (Revolution and Counterrevolution, 1917–2017) என்ற கட்டுரையில் மன்த்லி ரிவ்யூவின் (Monthly Review) ஆசிரியரான பேராசிரியர் John Bellamy Foster சிலிப்புரட்சி தோற்கடிக்கப்பட்ட விதம் தொடர்பாக பின்வருமாறு கூறுகின்றார்:

‘1970இல் சிலியில் பொப்புலர் யூனிட்டி (Popular Unity) அரசின் தலைவராக ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சால்வடார் அலெண்டே (Salvador Allende) சிலியில் சோஷலிசத்தை கொண்டுவருவதாக அறிவித்தார். அதன் முதற்கட்டமாக, அந்நாட்டின் பெரு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த அமெரிக்க பெருநிறுவனங்களின் சொத்துக்களை அந்த அரசு தேசியமயமாக்கியது.

1970-ல் மார்க்சிய-சோஷலிச சார்பு இதழான மன்த்லி ரிவ்யூவின் வெளியீட்டாளர்களான ஹேரி மக்டாப் (Harry Magdoff)> போல் ஸ்வீசி (Paul Sweezy) ஆகியோரை அதிபர் அலெண்டே தனது அரசின் துவக்க விழாவிற்கு அழைத்திருந்தார். மக்டாப் மற்றும் ஸ்வீசி அலெண்டேயின் நீண்ட நாள் நண்பர்களாவர். துவக்கவிழா நிகழ்ச்சியில், அமெரிக்காவிற்கும் சிலி இராணுவத்திற்கும் உள்ள தொடர்பு, அதனால் ஏற்படக் கூடிய அபாயம், இதன் தொடர்ச்சியாக வாஷிங்டனால் ஏற்பாடு செய்யப்படும் ஆட்சிக் கவிழ்ப்பிற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அவர்கள் அலெண்டேவை எச்சரித்தார்கள். தற்போதுள்ள உலக ஒழுங்கிற்கு குந்தகம் ஏற்பட்டால், ஏகாதிபத்தியம் எத்தகைய சட்டங்களையும் மதிக்காது எனவும் மக்டாப்பும் ஸ்வீசியும் எச்சரித்தனர்.

உண்மையிலேயே மூன்றாண்டுகளுக்குப் பின்னர், 1973 ஆம் ஆண்டு ஜெனரல் ஒகஸ்ரோ பினோசெ (Augusto Pinochet) மூலம் அலெண்டேவும் ஆயிரக் கணக்கானோரும் உயிரிழந்து, இரத்த வெள்ளத்தில் சிலியின் ஆட்சி கைப்பற்றப்பட்டது. இவையனைத்தும் உணர்த்தும் வரலாறு, புரட்சிகள் உருவானாலும் கூட, அவை எதிர்ப்புரட்சியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதாகும். உண்மையிலேயே கடந்த நூற்றாண்டின் புரட்சியையும் எதிர்ப்புரட்சியையும் மதிப்பீடு செய்யும்போது எதிர்ப்புரட்சியின் வலிமையையும் வீரியத்தையும் மிகுந்த அழுத்தத்துடனேயே மதிப்பீடு செய்ய வேண்டும். போராட்டங்களையும் தவறுகளையும் விரிவான வரலாற்று இயங்கியல் அடிப்படையில் பார்க்க வேண்டும்’

இலங்கையில் சிறுபான்மை அரசொன்றினை அமைத்துள்ள ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டமைப்பினையோ அல்லது மைத்திரி, மகிந்த போன்றவர்களையோ சிலியின் ‘பொப்புலர் யூனிட்’ மற்றும் சால்வடார் அலெண்டேயுடன் முழுமையாக ஒப்பிட முடியாது. ஏன் சிலியின் நிலைமைகளும் இலங்கையின் நிலைமைகளும் கூட வெவ்வேறானவை. ஆனால் ‘மக்டாப்’ மற்றும் ‘ஸ்வீசி’யின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தமால் விட்டதால் சிலிக்கு நேர்ந்த விபரீதத்தை இலங்கை மாத்திரமல்ல, ஒவ்வொரு மூன்றாமுலக நாடுகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி மைத்தரியையும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவையும் தீர்த்துக்கட்டும் முயற்சி அம்பலத்திற்கு வந்ததென்பது ஓர் எச்சரிக்கையே. இதனை ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டமைப்பினரும் மற்றும் மைத்திரியும் மகிந்தாவும் சரியாகக் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகின்றது.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் அவர்களது உள்ளூர் ஏஜெண்டுகளும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லீம் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் சேர்ந்து, ரணில் விக்கிரமசிங்காவை பதவிக்குக் கொண்டுவர எடுக்கும் பிரயத்தனங்களை நோக்குமிடத்து, அவர்களின் சதித்திட்டம், மைத்திரியையும் ராஜபக்ச குடும்பத்தினைரையும் கொன்றுதள்ளி, இலங்கையில் நீண்டகாலத்திற்கு நவீன தாராளமயவாதத்திற்கு ஏதுவாக சர்வாதிகார ஆட்சியொன்றினை நிறுவும் எண்ணம், மயிரிழையில் நழுவவிடப்பட்டுள்ளது போன்றே தோன்றுகின்றது. அதனால் தற்போதைய சிறுபான்மை அரசும் இலங்கை மக்களும் ‘எதிரி எங்களை விடவும் பலமானவன்’ என்ற எண்ணத்துடனேயே தொடர்ச்சியாகச் செயற்பட வேண்டும்.

நன்றி வானவில்”

 1,608 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )

yozgat escort kars escort tokat escort osmaniye escort bayburt escort afyon escort kahramanmaraş escort çorum escort fethiye escort kastamonu escort balıkesir escort erzurum escort sivas escort düzce escort ordu escort manavgat escort burdur escort adıyaman escort aydın escort giresun escort mardin escort kutahya escort şanlıurfa escort yalova escort van escort kırklareli escort bilecik escort karaman escort muğla escort zonguldak escort
error: Content is protected !!
brazzers tecavüz porno turbanlı porno