முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > டெஸ்போட் வழியான வீதி போக்குவரத்து வழமைக்கு திரும்பியது!!

டெஸ்போட் வழியான வீதி போக்குவரத்து வழமைக்கு திரும்பியது!!

நுவரெலியா நானுஓயா டெஸ்போட் வழியாக தலவாக்கலைக்கும், மெராயா வழியாக டயகம பிரதேசத்திற்கும் செல்லும் ஏ.7 பிரதான சுற்று வட்ட வீதியில் பெரிய வாகனங்கள் பயணிக்க நானுஓயா பொலிசார் இன்று (30) மாலை 4 மணிமுதல் அனுமதி வழங்கியுள்ளார்கள்.டெஸ்போட் தோட்டத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதியின் பழைமையான பாலம் தாழிறங்கியதன் காரணமாகவே கடத்த (27) ஆம் திகதி மாலை முதல் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

தாழிறக்கத்துக்கு உள்ளான பாலத்தினை பழுது பார்க்கும் பணியை நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபை சீர்செய்ததை தொடர்ந்து தற்போது இவ்வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது என நானுஓயா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

(டி.சந்ரு)

Leave a Reply

error: Content is protected !!