வெற்றிக்கனியை ருசித்தது மஸ்கெலியா பிரதேச சபை!!

0
100

நேற்றைய தினம் ஹட்டன் டன்பார் மைதானமே விழாக்கோலம் கொண்டிருந்தது.காரணம் பிரதேச ,நகரசபைகளுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி கோலாகலமாக இடம்பெற்றது.

நோர்வூட்,மஸ்கெலியா,நோர்வூட்,அம்பகமுவ பிரதேச சபைகள் முட்டிமோதிக்கொண்ட இக்கிரிக்கட் சுற்றுப்போட்டியில் எவ்வித அரசியல் பாகுபாடும் இல்லாமல் அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து டன்பார் மைதானத்தை குஷிப்படுத்தினர்.

10ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் ஒவ்வொரு அணிகளும் தன் அணிகள் வெற்றிப்பெற கடுமையாக போராடிய போதும் மஸ்கெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபை அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்த தெரிவாகின.
மிகவும் கடுமையாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் அம்பகமுவ பிரதேச சபை அணியை வீழ்த்தி மஸ்கெலியா பிரதேச சபை வெற்றியை சுவீகரித்தது.

இப்போட்டியில் ஹட்டன், நோர்வூட்,அம்பகமுவ, மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here