முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்கும்வரை பெருந்தோட்ட தொழிலாளர்களின் பணிபுறக்கணிப்பு தொடரும்- தொண்டா தெரிவிப்பு

ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்கும்வரை பெருந்தோட்ட தொழிலாளர்களின் பணிபுறக்கணிப்பு தொடரும்- தொண்டா தெரிவிப்பு

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களினால் முன்னெடுக்கபட்டு வரும் பணிபுறக்கணிப்பானது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்கும் வரை தொழிலாளர்களின் பணிபுறக்கணிப்பு தொடரும் என
இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் முன்னால் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

05.12.2018. புதன் கிழமை பணிபுறக்கனிப்பில் ஈடுபட்டு வருகின்ற தொழிலாளர்களை தோட்டவாரியாக சென்று சந்தித்த போதே
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த இ.தொ.கா.தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மலையகம் எங்கும் இரண்டவது நாளாக இந்த பணிபுறக்கனிப்பு இடம் பெற்று வருகிறது இந்த ஆர்பாட்டம் தொடர்ந்தும் இடம் பெற்றால் தொழிலாளர்களின்
பணிபுறக்கனிப்பு வெற்றி பெறும் கடந்த மாதங்களில் எமது தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினை தொடர்பில் ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்கள் வர்த்தகர்கள் மற்றும் வெளி நாடுகளில் வாழும் எமது தமிழ்
உறவுகள் வடகிழக்கு தமிழ் மக்கள் மற்றும் கொழும்பு காலிமுகத்திடலில் கூட தமது பெற்றோர்களுக்காக மலையக இளைஞர்கள் கம்பிணிமார்களுக்கு எதிராக எதிர்பினை வெளிபடுத்தி ஒரு அழுத்தத்தை கொடுத்து இருந்த போது கூட நமது
இனத்தை சேர்ந்த சிலர் நம்மை காட்டு கொடுக்க முயற்சி செய்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

மலையகத்தில் உள்ள அனைத்து தோட்ட புறங்களிலுமே இந்த பணிபுறக்கனிப்பு போராட்டமானது வெற்றிகரமாக இடம் பெற்றுவருகிறது கம்பணி காரர்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா பணிபுறக்கனிப்பின் பிறகு ஒரு சில கம்பணி காரர்கள் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு 650ரூபா தருவதாக கூறினார்கள் நாங்கள் தொடர்ந்து அவர்களோடு
பேச்சிவார்த்தையில் ஈடுபட்டு வருவதோடு இந்த அழுத்தத்தின் காரணமாக தோட்ட தொழிலாளர்களுடைய பணிபுறக்கனிப்பு பேராட்டம் வெற்றிபெரும் எனவும் குறிப்பிட்டார்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!