முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > 13 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கிரிக்கெட் சீருடை வழங்கி வைத்தார் ராஜாராம்!!

13 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கிரிக்கெட் சீருடை வழங்கி வைத்தார் ராஜாராம்!!

இன்றைய இளம் வீரர்கள் எங்கு சென்றாலும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து செல்ல ஆசைப்படுகின்றனர்.அதனால் பல இடங்களில் நடைபெறும் விளையாட்டுப்போட்டிகளில் சீருடை அணிந்தே விளையாடுகின்றனர்.ஆனால் ஒரு சில இளம் வீரர்கள் சீருடை இல்லாமல் இன்றும் விளையாடி வருகின்றனர்.அவ்வாறு சீருடை இல்லாத ஓர் அணியை இணங்கண்டு சீருடை வழங்கி வைத்தார் முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினர் ராஜாராம்.13 வயதிற்கு உட்பட்ட நுவரெலியா எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராம கிரிக்கெட் அணிக்கு இச்சீருடை வழங்கப்பட்டது.பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட இச்சீருடையில் சுமார் 11 வீரர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.இதன்போது அப் 13 வயதுக்கு உட்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் மற்றும் எஸ்.ஓ.எஸ் சிறுவர்களுக்கு பொறுப்பான உத்தியோத்தர்கள் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

Leave a Reply

error: Content is protected !!